உளவுத்துறை ஏட்டுக்கும், சட்டம் ஒழுங்கு பிரிவு காவல் துறைக்கும் முன் விரோதத்தில் தவறாக ரிப்போர்ட் - உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று காவலர்கள் பணியிட மாற்றம்
திருச்சி சமயபுரம் கோவில் (ஏப்ரல் 18ம் தேதி) தேரோட்டத்திற்காக காவலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசாருக்கு அறைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. உதவி ஆய்வாளர் பிரகாஷ் மற்றும் மூன்று காவலர்கள் ஒரு அறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட தங்கி இருந்தனர்.
அன்று ஒரு காவலருக்கு பிறந்தநாள் இருந்ததால் ரூமில் மதுபானம் அருந்தி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் உளவு பிரிவு செந்தில்குமார் இது தொடர்பாக ரிப்போர்ட் அனுப்பிய பொழுது அருகே இருந்த அறையில் ஒரு பெண்ணை கையைப் பிடித்து இழுத்ததாகவும் பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டதாகவும் தவறுதலாக ரிப்போர்ட் அனுப்பியுள்ளார்.
திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் நடந்த விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்நிலையில் பெரம்பலூர் ,அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இந்த மூன்று காவலர்கள் பணியிட மாற்றம் செய்ய திருச்சி காவல்துறை துணைத் தலைவர் சரவண சுந்தர் உத்தரவிட்டுள்ளார்.
உதவி ஆய்வாளர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இவர்கள் உளவு பிரிவில் பணிபுரிந்து வரும் செந்தில்குமார் மீது புகார் கொடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn