மணப்பாறை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியது இருவர் உயிரிழப்பு ஒருவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதி

மணப்பாறை அடுத்த அனியாப்பூர் அடுத்த காட்டாயம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் வயது 34 இவர் புதிய கட்டிங்களுக்கு கண்ணாடி வே லைப்பாடுகள் செய்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார்
இவரும் இவருடைய நண்பர்கள் பாலா, மதன் பாபு ஆகிய மூவரும் இருசக்கர வாகனத்தில் மறவனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது திருச்சியில் இருந்து மணப்பாறை நோக்கி வந்த சொகுசு கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் பயணித்த சதீஷ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் மேலும் இருசக்கர வாகனத்தில் சென்ற பாலா, மதன் பாபு ஆகியோர் பலத்த காயத்துடன் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்பு மதன் மணப்பாறை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், பாலா திருச்சி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்ட நிலையில் இவரும் உயிரிழந்தார்,
இந்த விபத்து குறித்து மணப்பாறை காவல்துறை ஆய்வாளர் ரகுராம் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision