தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கம் சார்பில் திருச்சியில் ஜூனியர் பேட்மிட்டன் லீக் போட்டி தொடக்கம்

தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கம் சார்பில் திருச்சியில் ஜூனியர் பேட்மிட்டன் லீக் போட்டி தொடக்கம்

தமிழ்நாடு பேட்மிண்டன் சங்கம் சார்பில் ஜூனியர் பேட்மிண்டன் லீக் சீசன் - 2 பேட்மிட்டன் போட்டிகள் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் இன்று தொடங்கியது.

13 முதல் 19 வயதுக்குட்பட்ட வீரர், வீராங்கனைகளுக்கான இந்த போட்டியில் சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ், திருச்சி தமிழ் வீராஸ், கோவை சூப்பர் கிங்ஸ், ரெயின்போ ராக்கர்ஸ், மதுரை இந்தியன்ஸ், தஞ்சை தலைவாஸ், விருதுநகர் வேங்கை, திருவாரூர் டெல்டா கிங்ஸ் ஆகிய எட்டு அணிகள் கலந்து கொண்டு மோதுகின்றது.

ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவுகளாக ஆடவர் மற்றும் மகளிர்க்கு என தனித்தனியே போட்டிகள் மற்றும் கலப்பு இரட்டையர் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இன்று தொடங்கி வருகிற 15ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டியினை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு களித்து வருகின்றனர்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் 2-1ன்ற செட் கணக்கில் மதுரை இந்தியன்ஸ் அணி, திருச்சி தமிழ் வீராஸ் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் திருச்சி தமிழ் வீராஸ் அணி, கோவை அணியை 2 - 1 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision