1500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஆம்னி வேன் பறிமுதல். ஒருவர் கைது

500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஆம்னி வேன் பறிமுதல். ஒருவர் கைது.13.03.25 ம் தேதி காலை திருச்சி குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத் துறை காவல் கண்காணிப்பாளர் திருமதி சி.க்ஷ்யாம்ளா தேவி அவர்களது உத்தரவின் பேரில் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. R. வின்சென்ட் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைத்து அரிசி மற்றும் உணவு பொருட்கள் கடத்தல் சம்பந்தமாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருவெறும்பூர் - வேங்கூர் சாலையில்
கூத்தைப்பார் பொன் அரசு காத்த அம்மன் கோயில் அருகில் வாகனத்தணிக்கை செய்து கொண்டிருந்த போது வடக்கில் இருந்து தெற்கு பக்கம் நோக்கி வந்த வெள்ளை நிற மாருதி ஆம்னி வேனை நிறுத்தி சோதனை செய்து பார்க்க அதில் 30 மூட்டைகளில் சுமார் 1500 கிலோ பொது விநியோகத் திட்ட ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. எனவே அந்த நபரை கைது செய்து விசாரிக்க தனது பெயர் முருகானந்தம் வயது 23/25 த/பெ. மணி 5/61,கீழ தெரு திண்டுக்கரை அந்தனல்லூர் திருச்சி என்றும் வேங்கூர் கூத்தைப்பார் ஆகிய பகுதியில் இருந்து பொதுமக்களிடமிருந்து குறைந்த விலைக்கு ரேஷன் அரிசியை வாங்கி அதிக விலைக்கு வாஙகி இரவு நேர
டிபன் கடைகளுக்கும் அதிக விலைக்கு விற்க கடத்தி வந்தது தெரியவந்ததால் வழக்கு சொத்துக்கள் மற்றும் நான்கு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision