தொடர் திருட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் கைது

தொடர் திருட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம் முசிறி காவல் உட்கோட்டம் ஜெம்புநாதபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கடந்த நான்கு மாதங்களாக பகல் மற்றும் இரவு நேரங்களில் கோவில்கள் மற்றும் வீடுகளை குறிவைத்து திருட்டு சம்பவங்களை ஈடுபட்டு வந்த

 குற்றவாளிகளைப் பிடிக்க திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வரத்தினம் அவர்களின் உத்தரவின்படி முசிறி காவல் துறை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில்  தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வந்தவர்கள் துறையூர் தாலுக்கா கள்ளிக்குடி அருகே உள்ள வனப் பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

 அதன் பெயரில் அங்கு சென்ற தனி படையினர் தமிழ்பாரதி,சரவணன் ஆகியோரை பிடித்து விசாரித்ததில் மேற்படி குற்றங்களை இருவரும் செய்தது தெரிய வந்தது. தமிழ் பாரதி என்பவர் மீது திருச்சி அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் 40க்கும் மேற்பட்ட வழக்குகளும் சரவணன் மீது திருச்சி மாவட்டம் மற்றும் திருச்சி மாநகரில் பல வழக்குகளும் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

 குற்றவாளிகளை கைது செய்து இருவருடமிருந்து ஜெம்புநாதபுரம் காவல் நிலையத்தில் கடந்த நான்கு மாதத்தில் நடைபெற்ற திருட்டு வழக்கின் சொத்துக்கலான 12 சவரன் தங்க நகைகள் மற்றும் இரண்டு இரு சக்கர வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இது போன்ற திருட்டுச் சட்டவிரோத செயல்கள் ஈடுபடும் சந்தேக நபர்கள் பற்றி தெரிய வந்தால் உடனடியாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

அவர்களின் உதவி எண் 8939146100க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என பொதுமக்களிடம் திருச்சி மாவட்ட காவல்துறை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது தகவல் கொடுப்பவரின் பெயர் விலாசம் ரகசியம் காக்கப்படும்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision