நள்ளிரவில் மணல் கடத்தி சென்ற இரு வாகனங்கள் பறிமுதல் - மணல் திருடர்கள் வாகனங்களை நிறுத்தி தப்பி ஓட்டம்

நள்ளிரவில் மணல் கடத்தி சென்ற இரு வாகனங்கள் பறிமுதல் - மணல் திருடர்கள் வாகனங்களை நிறுத்தி தப்பி ஓட்டம்

திருச்சி அருகே நள்ளிரவில் மணல் கடத்தி சென்ற இரு வாகனங்கள் பறிமுதல் - மணல் திருடர்கள் வாகனங்களை நிறுத்தி தப்பி ஓட்டம்.

திருச்சி மாவட்டம், முசிறி அருகே காட்டுப்புத்தூர் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட சப்-இன்ஸ்பெக்டர் சங்கர், முருகன் மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது தொட்டியம் - காட்டுப்புத்தூர் செல்லும் சாலையில் காடுவெட்டி அருகே ரோந்து பணியில் நின்ற போலீசாரை பார்த்ததும் சட்டவிரோதமாக பொலிரோ பிக்அப் இரண்டு வாகனங்களில் திருட்டுத்தனமாக மணல் ஏற்றி வந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு தப்பி ஓடினர்.

 இதையடுத்து போலீசார் மணலுடன் நின்ற இரண்டு வாகனங்களையும் பறிமுதல் செய்து தப்பி ஓடிய நபர்கள் குறித்து வழக்கு பதிந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவேரி ஆற்றில் இருந்து சட்டவிரோதமாக வாகனங்களில் மணல் கடத்தல் கடத்தி செல்வதை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision