பட்டபகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை - திருச்சியில் பரபரப்பு!!

பட்டபகலில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் கொள்ளை - திருச்சியில் பரபரப்பு!!

திருச்சி ஶ்ரீரங்கத்தில் வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Advertisement

ஸ்ரீரங்கம் வடக்குவாசல் புதுத்தெருவை சேர்ந்தவர் மோகனா. இவர் வீட்டில் தனியாக இருக்கும் பொழுது நான்கு பேர் கொண்ட கும்பல் வீட்டு வாடகை வசூல் செய்வது போல் உள்ளே புகுந்து கத்தியை கழுத்தில் வைத்து மிரட்டி வாயை பொத்தி அவர் போட்டிருந்த 10 பவுன் தங்க நகைகளையும் 45 ஆயிரம் ரூபாயும் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

Advertisement

ஸ்ரீரங்கத்தில் மாலை நேரத்தில் இச்சம்பவம் நடந்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS