குழந்தையின் பெற்றோர், உறவினர்களைத் தேடும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

படத்தில் காணும் ஆண் குழந்தை திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரம்பூர் ஒன்றியம் வாழவந்தான் கோட்டை பகுதியில் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட வயதோதிக பாட்டி ஒருவரால் பராமரிக்க முடியாமல் இருப்பதாக பெறப்பட்ட தகவல் அடிப்படையில்( 02.02 2020) அன்று சைல்டு லயன் 1098 மூலமாக குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் நலக் குழுவில் முன்னிலைப்படுத்தியதாகவும்
குழந்தையை பராமரித்து வந்த பாட்டி வீரம்மாள் மற்றும் அவருடைய தாயார் இறந்துவிட்ட நிலையில் சிறுவன் தந்தை எங்கு இருக்கிறார் என்று தெரியாத நிலையில் அக்குழந்தைக்கு அருண்குமார் என்று பெயரிடப்பட்டு அரியலூர் அடைக்கல மாதா சிறப்பு தத்து மையத்தில் பராமரிக்கப்பட்டு தற்போது சென்னை பாலா மந்திர் காமராஜர் டிரஸ்ட் சிறப்பு தத்து மையத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறார்.இங்கு குழந்தையை பற்றிய விவரங்கள் மற்றும்
பெற்றோர்கள் உறவினர்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் இவ்வாறு அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் திருச்சிராப்பள்ளி மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு தகவல் தெரிவிக்கலாம்.மேலும் குழந்தையை உரிமை கோரி எவரும் தொடர்பு கொள்ளாத நிலையில் குழந்தையை சட்டப்படி தத்து கொடுப்பதற்கு தடையில்லா சான்று வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
குழந்தைகள் நலக்குழு,
கலையரங்கம் வளாகம் மெக் டோனால்ட் ரோடு,
கன்டோன்மென்ட்,
திருச்சிராப்பள்ளி-1
0431-2413819
9894487572
மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, கலையரங்கம் வளாகம், மெக்டொனால்டுரோடு, கன்டோன்மென்ட்
திருச்சிராப்பள்ளி 1
0431-2413055
6369102865/8122201098
மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா பிரதீப் குமார் அவர்களால் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision