சாலை, பேருந்து வசதி கேட்டு கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

சாலை, பேருந்து வசதி கேட்டு கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கோம்பை புத்தூர் கிராமத்தில் முறையான பேருந்து வசதிகள் இல்லாததால் சுமார் 100க்கும் அதிகமான கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அந்த மனுவில்... கோம்பை புதூர் முதல் செங்காட்டுப்பட்டி வரை குண்டும் குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும்.

கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் அல்லது ஏற்கனவே இந்த வழித்தடத்தில் இயக்கப்பட்ட மினி பஸ்களை இயக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி உள்ளனர். பின்னர் இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்.... துறையூர் பேருந்து நிலையத்திலிருந்து தினமும் மூன்று பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது.

இதற்கு மாற்றாக மினி பஸ்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில் அதனை வட்டார போக்குவரத்து அலுவலர் அபராதம் விதித்து இயக்க அனுமதி மறுத்ததால் தற்போது இரண்டு வகையிலும் பேருந்துகள் இல்லாமல் தவித்து வருவதாக கிராம மக்கள் ஆதங்கம் தெரிவித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision