வரும் 26-ம் தேதி விசிக சார்பில் திருச்சியில் 'ஜனநாயகம் வெல்லும் மாநாடு'

வரும் 26-ம் தேதி விசிக சார்பில் திருச்சியில் 'ஜனநாயகம் வெல்லும் மாநாடு'

 திருச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வெல்லும் ஜனநாயகம் பிரம்மாண்ட மாநாடு - தமிழக முதல்வர், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் உட்பட அகில இந்திய, மாநில கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர் - தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 5லட்சம் தொண்டர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வெல்லும் சனநாயகம் என்ற தலைப்பில் வரும் 26ஆம் தேதி "விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் அரசியல் *வெள்ளிவிழா* "

"கட்சித் தலைமையின் அகவை 60 *மணிவிழா* " இந்தியா கூட்டணி தேர்தல் வெற்றி *கால்கோள் விழா* என முப்பெரும் விழாவாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினருமான எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் தலைமையில் மாநாடு நடைபெறுகிறது.

இம் மாநாடு திருச்சி மாவட்டம் சிறுகனூரில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவை மாநிலத்தைச் சேர்ந்த

விடுதலை சிறுத்தை கட்சியினர் சுமார் 5லட்சம் பேர் திரளாக கலந்து கொள்கின்றனர். மாலை நாலு மணி அளவில் எம் மாநாடு துவங்க உள்ளது.

இவ்விழாவில் வரவேற்புரையை விடுதலை சிறுத்தை கட்சியின் பொதுச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சிந்தனை செல்வன் வழங்குகிறார்,மாநாட்டின் நோக்க உரையைபொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவிக்குமார் வழங்குகிறார்.

சிறப்பு பேருரைகளை தமிழ்நாடு முதலமைச்சரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவருமான மு.க.ஸ்டாலின், அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ.எம்.எல் (விடுதலை) கட்சியின் பொதுச் செயலாளர் தீபங்கர் பட்டாச்சாரியா, திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர்

கே.எஸ் அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலச் செயலாளர் இரா முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் தலைவருமான வேல்முருகன், கொங்கு மக்கள் தேசிய கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும் தலைவருமான ஈ.ஆர்.ஈஸ்வரன், சி.பி.ஐ (எம்.எல்) தமிழக மாநில செயலாளர் ஆசை தம்பி, ஆம் ஆத்மி கட்சியின் தமிழக தலைவர் வசீகரன், மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் தமிழக அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.ராசா, எம் ஆர் கே பன்னீர்செல்வம், அன்பில் மகேஷ் பொய்யாமொழி, எஸ் எஸ் சிவசங்கர், சி .வெ.கணேசன் மற்றும் மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி.சிவா திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision