ஸ்ரீரங்கம் கோயில் பங்குனி தேர் திருவிழா தொடங்கியது

ஸ்ரீரங்கம் கோயில்  பங்குனி தேர்  திருவிழா தொடங்கியது

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆதி பிரம்மோற்சவம் எனப்படும் பங்குனி தேர் உற்சவம் இன்று அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பெரும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபட்டனர்.

பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படுவதும் 108 வைணவ திருத்தலங்களில் முதன்மையானதாக விளங்கும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி திருக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 11நாட்கள் ஆதி பிரம்மோற்சவம் நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டிற்கான உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்ற நிகழ்விற்காக நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து 3.45 மணிக்கு புறப்பட்டு கொடியேற்ற மண்டபம் வந்தடைந்தார் பின்னர் கொடி படத்திற்கு பூஜைகள் செய்யப்பட்டன சரியாக 5.45 மணிக்கு கும்ப லக்கணத்தில் மேளதாளங்கள் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது. இதில் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வணங்கி வழிபட்டனர்.இன்று முதல் 11 நாட்கள் நடைபெறும் உற்சவத்தின் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெறும்.

மேலும் ஆதி பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்ச்சியாக 13ஆம் தேதி தங்க கருட வாகனத்திலும், உறையூர் கமலவல்லி நாச்சியார் நம்பெருமாள் சேர்த்தி சேவை வருகின்ற 15ஆம் தேதி அன்றும் ஸ்ரீரங்கம் ரெங்கநாயகி தாயார் நம்பெருமாள் சேர்த்தி சேவை 18ஆம் தேதியும் கோரதம் எனப்படும் பங்குனி தேர் உற்சவம் 19ஆம் தேதி அன்றும் நடைபெற இருக்கின்றது.விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/KeRJArqMYOdAL0GvJhgfL8

#டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.co/nepIqeLanO