பஜ்ஜி, போண்டா, முறுக்குக்கு கோயில் உண்டியல் பணம் திருச்சியில் அண்ணாமலை பேட்டி

பஜ்ஜி, போண்டா, முறுக்குக்கு கோயில் உண்டியல் பணம் திருச்சியில் அண்ணாமலை பேட்டி

சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்த பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது....கூட்டணிக்கு என்பது மரபு தர்மத்திற்க்குட்பட்டது. இடைத்தேர்தல் எல்லாம் ஒரு கட்சியின் பலம், வளர்ச்சி அளவுகோல் இல்லை. கூட்டணி தர்மத்தோடு தான் நடைபெறுவது  கண்ணியமாக இருக்கும். திமுக காங்கிரஸ் கூட்டணி எதிர்த்து நிற்கக் கூடிய கட்சி பலம் வாய்ந்த கட்சியாக இருக்கணும். மக்கள் செல்வாக்கு பெற்றவராக மக்களின் ஆதரவு பெற்றவராக இருக்க வேண்டும்.

ஈரோடு பகுதியில் இருக்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும் என குறிப்பிட்டார். இடைத்தேர்தலில் பணம் என்பது ஆளுங்கட்சி தண்ணி போல் செலவிடுவார்கள். தெலங்கானாவில் டிஆர்எஸ்  கட்சி 350 கோடி இடைத்தேர்தலில் செலவிட்டு உள்ளார்கள். திமுக மூன்று அமைச்சர்களின் மாவட்டம் ஈரோடு. பணம் அதிக அளவு செலவு செய்யப்படும் என்பது பார்க்கும் பொழுது தெரியும். பாஜகவில் எந்த குழப்பமும் இல்லை எங்கள் கூட்டணியில் பெரிய கட்சி அதிமுக கட்சி. ஈரோட்டில் இருந்து அதிமுக சார்பாக ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.

முன்னாள் அமைச்சர்கள் உள்ள மாவட்டம் அதிமுக விருப்ப மனுக்களை கொடுக்க தெரிவித்துள்ளது. பன்னீர்செல்வம் என்னை வந்து சந்தித்துள்ளார். நிற்ககூடிய வேட்பாளர் முழு தகுதி வாய்ந்தவராக இருக்க வேண்டும் பணப்பலம், படைபலம்  அதிகாரிகள் பலத்தையும் திமுக தவறாக பயன்படுத்தும் அதை எதிர்க்கக்கூடிய ஒரே வேட்பாளர் நிற்க வேண்டும். பாராளுமன்ற தேர்தலில் 13 மாதங்கள் வரப்போகிறது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படக்கூடாது பொறுமையாக நிதானமாக நல்ல முடிவு விரைவில் எடுக்கப்படும். காங்கிரசின் மாவட்ட தலைவரே காங்கிரஸ் வேட்பாளருக்கு எதிர்ப்பு எனக் கூறியுள்ளார். காங்கிரஸில் பெரிய அளவில் பிரச்சனை இருக்கிறது.  

இளங்கோவன் ( ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வேட்பாளர்)  அவர்கள் மற்ற கட்சிகளை பேசுவதற்க்கு என்ன தகுதி இருக்கிறது என குறிப்பிட்டார். இடைத்தேர்தல் கட்சிக்கு பலப்பரிட்சை கிடையாது. திமுக காங்கிரஸ் கூட்டணி வேட்பாளரை தோற்கக்கூடிய வேட்பாளராக இருக்க வேண்டும். போட்டி பொறாமை என்பது கிடையாது. அறநிலை தொடர்பாக  தகவல் அறிய உரிமை சட்டம் மூலம் அனைத்து தகவல்களையும் ஆதாரங்களை பெற்றுள்ளோம்.

மிக்சர் முறுக்கு வாங்க அறநிலையத்துறை இல்லை. உண்டியலில் இருந்து பணம் எடுத்து உள்ளார்கள். உண்டியல் பணம் அதிகாரிகளின் பஜ்ஜி , போண்டா முறுக்காக மாறக்கூடாது. நான் கேட்ட கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு பதில் கூறட்டும் என்றார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn