குண்டர் சட்டத்தில் இருவர் கைது

குண்டர் சட்டத்தில் இருவர் கைது

கடந்த 21.03.23-ந் தேதி பொன்மலை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட தங்கேஸ்வரி நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த டாஸ்மாக் ஊழியரிடம் கத்தியை காட்டி மதுபாட்டில்கள் மற்றும் பணம் கேட்டு மிரட்டி பறித்ததாகவும் பெறப்பட்ட புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரி ரவுடி சோனி (எ) பரத்குமார் 25/23 என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் ரவுடி சோனி (எ) பரத்குமார் மீது பொன்மலை காவல்நிலைய பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததாக ஒரு வழக்கும், 3 அடிதடி வழக்குகளும், கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்ததாக ஒரு வழக்கு உட்பட 8 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது. எனவே ரவுடி சோனி (எ) பரத்குமார் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பவர் எனவும், கஞ்சா விற்பனை செய்பவர் என விசாரணையில் தெரிய வருவதால், மேற்படி எதிரியின்

தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு பொன்மலை காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த காவல் ஆணையர் M.சத்திய பிரியா, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார். அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரி மீது குண்டர் தடுப்பு ஆணையினை சார்பு செய்தும் மேற்படி எதிரி சிறையில் அடைக்கப்பட்டார்.

கடந்த 30.01.23-ந்தேதி தில்லைநகர், சாஸ்திரிரோட்டில் இரவு நேரத்தில் பூட்டியிருந்த ஸ்டேஷ்னரி கடையின் பூட்டை உடைத்து கடையில் வைத்திருந்த ரூ.90000/- பணம் மற்றும் 16 கிராம் தங்க காசுகளை திருடு போய்விட்டதாக பெறப்பட்ட புகாரின்பேரில் தில்லைநகர் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன்விசாரணை செய்யப்பட்டது. விசாரணையில் திருச்சி பீமாநகரை சேர்ந்த எதிரி கிறிஸ்டோன் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலும் விசாரணையில் எதிரி கிறிஸ்டோன் மீது பாலக்கரை காவல்நிலைய பகுதியில் வங்கி பெண் ஊழியரின் வீட்டில் இருசக்கர வாகனம் திருடியதாக ஒரு வழக்கும், பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தவரிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.3000/- பணம் பறித்ததாக ஒரு வழக்கும், கோட்டை காவல்நிலைய சிங்காரத்தோப்பு பகுதியில் உள்ள துணிகடையின் பூட்டை உடைத்து ரூ.21000/- பணத்தை திருடியதாக ஒரு வழக்கு உட்பட 5 வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரிய வந்தது.

எனவே எதிரி கிறிஸ்டோன் @ மூனு கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதும், இரவு நேரங்களில் வீடு மற்றும் கடைகளில் பூட்டை உடைத்து திருடும் எண்ணம் கொண்டவர் என விசாரணையில் தெரிய வந்ததால், மேற்படி எதிரியின் தொடர் குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தில்லைநகர் குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் கொடுத்த அறிக்கையினை பரிசீலனை செய்த காவல் ஆணையர் M.சத்திய பிரியா, மேற்படி எதிரியை குண்டர் தடுப்பு சட்டத்தின்கீழ் கைது செய்ய ஆணையிட்டார்.

அதனை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் இருந்து வரும் மேற்படி எதிரி மீது குண்டர் தடுப்பு ஆணையினை சார்பு செய்தும் மேற்படி எதிரி சிறையில் அடைக்கப்பட்டார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn