மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 6 நாட்கள் நாடகத் திருவிழா

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் 6 நாட்கள் நாடகத் திருவிழா

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நலிவடைந்த நிலையில் உள்ள நாடகத்துறையின் முக்கியதுவத்தை உணர்த்தும் வகையில் 6 நாட்கள் நாடக திருவிழாவானது 22-ம் தேதி முதல் 27-ந்தேதி வரை நடைபெற்றது.

மேவரிக் தியேட்டரால் ஷேக்ஸ்பியரின் மெக்பத் நாடகம் அரங்கேற்றப்படுகிறது. இந்நாடகத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் - முன்னாள் மாணவர்கள் குழந்தைகள் என அனைவருக்கும் நாடகத்தில நடிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

 நாடகத்தைஇயக்குநர் பேராசிரியர்கள் மோசஸ், ஸ்டீவர்டு‌ ராஜ். நிவேதா ஆகியோர் இயக்குநர் மற்றும் இனணை இயக்குநர்களாக செயல்பட்டு இந்நாடகத்தை இயக்கி சுமார் 100-பேர் கொண்ட குழுவாக நாடகத்தை நடத்தினார்கள்.

இந்த நாடகமானது சுமார் 3 மாத உழைப்பில் உறுவாக்கப்பட்டு ஒரு நாளைக்கு 2 காட்சிகள் வீதம் நடத்தப்பட்டது. இதில் மதுரை சுற்றுவட்டப் பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள் பொதுநல அமைப்புகள், பொதுமக்கள் என 5000-க்கு மேற்ப்போர் கண்டு களித்து சென்றனர். கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலர் முனைவர் ம. தவமணி கிறிஸ்டோபர், நாடகத்தை சிறப்பாக நடத்தியதற்கு  வாழ்த்து தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO