நாய் குரைத்ததால் தகராறு - இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அடித்துக்கொலை - தந்தை, மகன் கைது

நாய் குரைத்ததால் தகராறு - இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் அடித்துக்கொலை - தந்தை, மகன் கைது

திருச்சியை அடுத்த நம்பர் ஒன் டோல்கேட் அருகே உள்ள பூக்கொல்லை பகுதி யைச் சேர்ந்தவர் முத்துக்கி ருஷ்ணன் (49). இவர் மண்ணச்சநல்லூர் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் ஆவார். அதே பகுதியில் வசிப்பவர் முருகேசன் மகன் நெய் கிருஷ்ணன் (23). நேற்று முன்தினம் இவர் முத்துக்கிருஷ்ணன் வீட்டு அருகே உள்ள அவரது கழிப்பறைக்கு சென்றுள்ளார்.

அப்போது நெய்கிருஷ்ணனை பார்த்து முத்துக்கிருஷ்ணனின் வளர்ப்பு நாய் குரைத்திருக்கிறது. இதனால் இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டுகை லப்பாகியுள்ளது. நெய் கிருஷ்ணன், அவரது தந்தை முருகேசன் ஆகியோர் சேர்ந்து முத்துகிருஷ்ணனை தாக்கினர். அப்போது, முத்துக்கிருஷ்ணனும் அவர்களை திருப்பி தாக்கினார்.

இதில் காயமடைந்த முத்துக்கிருஷ்ணனும், நெய்கிருஷ்ணனும் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். பின்னர் முத்துக்கிருஷ்ணன் முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெய்கிருஷ்ணன் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து நெய்கிருஷ்ணன், அவரது தந்தை முருகேசன் மீது கொலை வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision