தள்ளுவண்டி தரக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

தள்ளுவண்டி தரக்கடை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்

திருச்சி மாவட்ட தள்ளுவண்டி தரற்கறை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலத் தழுவிய ஆர்ப்பாட்டம் திருச்சி மாநகராட்சி தலைமை அலுவலகம் முன்பு இன்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார்.

சாலையோர வியாபாரிகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வி, சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் ரங்கராஜன், சாலையோர வியாபாரி சங்க மாவட்ட பொருளாளர் சுரேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளாக திருச்சி மாநகராட்சி முழுவதிலும் உள்ள தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டை அவர்கள் நடத்தும் கடை முன்பு போட்டோ எடுத்து வழங்கிட கோரியும்,

தரைக்கடை வியாபாரம் செய்யாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்கக் கூடாது எனவும், அடையாள அட்டை வழங்கி வாக்காளர் பட்டியல் வெளியிடக் கோரியும் , வியாபாரிகள் சங்கங்களை அழைத்து பேசிய பிறகு வெடண்டிங் கமிட்டி தேர்தல் அறிவிப்பு செய்திட வேண்டும் எனவும், வியாபாரிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வியாபாரிகளுக்கு ஓய்வூதியம் வழங்க கோரியும், சாலையோர வியாபாரிகளை சட்டத்திற்கு விரோதமாக வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்துவதை கைவிட கோரியும்,

அனைத்து வியாபாரிகளுக்கு இலவச தள்ளுவண்டி வழங்கிட கோரியும் , நகர வெண்டிங் கமிட்டியில் மூன்றில் இரண்டு பங்கு இடங்களை சாலையோர வியாபாரிகளுக்கு ஒதுக்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட தள்ளுவண்டி தரற்கறை மற்றும் மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் மாநிலத் தழுவிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision