விக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் பள்ளியில் ஆண்டு விழா
திருச்சி ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு விக்னேஷ் குழுமத்தின் அறங்காவலர் சகுந்தலா விருத்தாசலம் தலைமை வகித்தார். தலைவர் கோபிநாதன் முன்னிலை வகித்தார்.
பட்டிமன்றப் பேச்சாளரான கவிதா ஜவஹர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களின் முன்னேற்றம், பெற்றோர்களின் கடமை மற்றும் ஆசிரியர்களின் பொறுப்பு குறித்துப் பேசினார். விழாவில் துணைத் தலைவர் லட்சுமி பிரபா கோபிநாதன் வரவேற்றுப் பேசினார்.
இயக்குனர் வரதராசன், ஆலோசகர் மலர்விழி, பள்ளி முதல்வர் நளினி, துணை முதல்வர் ஆரோக்கிய ரீனா, நிர்வாக அலுவலர் ஆறுமுகம், அபர்ணா, அஞ்சிதா, ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் பெற்றோர்கள் ஏராளாமானோர் கலந்து கொண்டனர். மாணவ மாணவிகளது கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஸ்ரீரங்கம் விக்னேஷ் ஸ்ரீரெங்கா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் கவிதா ஜவஹர் பரிசு வழங்கினார். அருகில் பள்ளி அறங்காவலர் சகுந்தலா விருத்தாசலம், தலைவர் கோபிநாதன், துணைத் தலைவர் லட்சுமி பிரபா கோபிநாதன், இயக்குனர் வரதராசன், ஆலோசகர் மலர்விழி, முதல்வர் நளினி, அபர்ணா, அஞ்சிதா மற்றும் பலர் உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision