லால்குடியில் சமூக பராமரிப்பு மையத்தை கனிமொழி எம்.பி திறப்பு

லால்குடியில் சமூக பராமரிப்பு மையத்தை கனிமொழி எம்.பி திறப்பு

 திருச்சி மாவட்டம் லால்குடி அருகே  கோவண்டாகுறிச்சிஊராட்சியில் அமைந்துள்ள மனநலம் மற்றும் சமூக பராமரிப்பு மையத்தினை  நாடாளுமன்ற உறுப்பின ர் கனிமொழிகருணாநிதி, தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திறந்து வைத்தனர்.


அப்போது பேசிய தூத்துக்குடி எம் பி கனிமொழி லால்குடி அருகே கோதண்டாகுறிச்சி ஊராட்சியில் உள்ள பனியன் மற்றும் பனியன் அகாடமியின் மனநலம் மற்றும் சமூக பராமரிப்பு மைய கட்டிடத்தினை திறந்து வைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

 மனநலம் பாதிக்க பட்டவர்களுக்கென அமைக்கப்பட்ட இந்த அமைப்பானது விரைவில் தூத்துக்குடி அருகே திருச்செந்தூர் பகுதியில் இதே அமைப்பினர்  மனநலம் பாதித்தவர்கள் குணமாகி, குணமானவர்கள் தலைமையில் மீண்டும் இல்லம் திட்டத்தை துவங்க உள்ளனர் என்றார்.

இதனைத் தொடர்ந்து எம்பி கனிமொழி செய்தியாளர்களிடம் கூறியதாவது தமிழக அரசு செய்யக்கூடிய திட்டங்கள் அனைத்தும் திராவிட மாடல் என்று சொல்வதை தமிழக ஆளுநர் ரவி காலாவதியான மாடல் என குறிப்பிடுகிறார் என்பது குறித்து கேட்டபோது தமிழக ஆளுநர்  பதவியே காலாவதியானது தான் எனவே காலாவதியான பதவிகளில் இருப்பவர்கள் கூறுவதை எதையும் நாம் பெரிதாக எடுத்துக் கொள்ளக் கூடாது என தெரிவித்தார்.


விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், ஊரக வளர்ச்சி துறை மற்றும் ஊராட்சித்துறை ஆணையர் தரேஷ் அகமது, லால்குடி தொகுதி எம்எல்ஏ செளந்திரபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn