உயர் சிகிச்சை வசதிகளுடன் கூடிய மருத்துவம் மற்றும் மருத்துவமனை கட்டிட விரிவாக்கம் செய்து தரக் கோரிக்கை மனு.
மக்கள் அதிகாரம் மணப்பாறை வட்ட செயலாளர் தோழர் லாரன்ஸ் தலைமையில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து மனு அளிக்க சென்றோம். மாவட்ட ஆட்சியர் இல்லாத காரணத்தினால் மாவட்ட துணை ஆட்சியர் அவர்களை சந்தித்து.. மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் இருதயம் மூளை நரம்பியல் மூட்டு மற்றும் ஸ்கேன் சம்பந்தப்பட்ட உயர் சிகிச்சைக்கான வசதிகள் இல்லாமல் மக்கள் பல ஆண்டுகளாக இருந்து வருகின்றன.
இதுபோன்ற உயர் சிகிச்சைகளை நோயாளிகள் பெற வேண்டும் என்றால் திருச்சி அரசு மருத்துவமனைக்கு தான் வரவேண்டிய அவல நிலை உள்ளது. ஆகவே மேற்கூறிய உயர் சிகிச்சை வசதிகளுடன் கூடிய மருத்துவமனை விரிவாக்கம் செய்ய போர்கால அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க ஆவணம் செய்கிறோம் என மாவட்ட துணை ஆட்சியர் உத்தரவாதம் அளித்துள்ளார்.
இந்த நிகழ்வில் மக்கள் அதிகாரம் திருச்சி மாவட்ட செயலாளர் செழியன், மக்கள் அதிகாரம் மாவட்ட பொருளாளர் கார்க்கி, மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் திருச்சி மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் மாவட்டத் துணைத் தலைவர் தோழர் ஆனந்த் மற்றும் மக்கள் அதிகாரத்தின் மாவட்ட குழு தோழர்கள் மணிமாலை, சைபுர் நிஷா, தேவன், ஜோசப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision