மாணவர்களின் கல்வியே இந்த பல்கலைக்கழகத்தில் கேள்விக்குறி - மாணவர்கள் வேதனை

மாணவர்களின் கல்வியே இந்த பல்கலைக்கழகத்தில் கேள்விக்குறி - மாணவர்கள் வேதனை

இதுக்குறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் தெரிவிக்கையில்.... பாரதிதாசன் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் PHD படிக்கும் எங்கள் நிலையை கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். கொரோனா தொடங்கிய காலத்தில் இருந்து நாங்கள் ஆய்வேட்டை தயாராக வைத்திருந்தும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பல்கலைகழகத்தில்  சமர்ப்பிக்க முடியாமல்  மரணத்தின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

காரணம் நாங்கள் UGC வழிகாட்டிய படி குறிப்பிட்ட ஒரு பதிப்பகத்தில் கட்டுரை போட்டு அதை ஆய்வேட்டில் இணைத்து திருச்சி  பாரதிதாசன் பல்கலைகழகத்தில் சமர்ப்பிக்க சென்றபோது குறிப்பிட்ட அந்த பதிப்பகத்தில் போட்ட கட்டுரைகளை ஏற்க முடியாது நீங்கள் வேறு பதிப்பகத்தில் கட்டுரைகள் போடவேண்டும் என்கிறார்கள். பல்கலைக்கழக தமிழ்த்துறை அறிவுறுத்தலின் படியே நடந்து கொண்டோம். ஆய்வேட்டை சமர்ப்பிக்க சில தினங்களே இருந்த நிலையில்  ஆய்வேட்டை சமர்ப்பிக்க பல்கலை கழகத்திற்கு நேரில் சென்றபோது திடீரென தமிழ்த்துறையின் மூலம் குறிப்பிட்ட அந்த பதிப்பகத்தில் போட்ட கட்டுரைகள் செல்லாது என்றும்,

உங்களது ஆய்வேட்டை பல்கலைகழகம் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்லி திருப்பி அனுப்பி விட்டார்கள். மீண்டும் சில தினங்களுக்கு பிறகு ஏப்ரல் 2022ல் எங்களிடம் இருந்த கட்டுரை புத்தகங்களை பல்கலை கழகத்தில் சமர்ப்பியுங்கள் நாங்கள் ஒரு குழு அமைத்து நல்ல முடிவாக எடுப்போம் என்றார்கள். ஆனால் இப்போது ஜீன் 2022ல் மாணவர்களின் கால அவகாசம் முடியும் நேரத்தில் எங்கள் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்று மெயில் அனுப்புகிறார்கள். இது எந்த விதத்தில் நியாயம்  மாணவர்களின் ஐந்து  ஆண்டு கால உழைப்பை அலட்சியமாக நினைக்கும் இவர்களிடம் யார் நியாயம் கேட்பது இதில் மாணவர்களின் தவறு ஏதும் கிடையாது. ஏனெனில் அந்த குறிப்பிட்ட பதிப்பகத்தில் கட்டுரை போட்டால் தான் ஆய்வேட்டை சமர்ப்பிக்க முடியும் என்று சொன்ன இதே பல்கலைக்கழகம் இப்போது எதை எதிர்பார்த்து அந்த அனுமதியை ரத்து செய்தது என்பது மாணவர்களுக்கு புரியாத புதிராகவே உள்ளது.

மேலும் இந்த ராஜா பதிப்பகத்தில் போட்ட கட்டுரைகளை மற்ற அனைத்து பல்கலை கழகங்களும் ஏற்றுக் கொண்ட இந்நிலையில் பாரதிதாசன் பல்கலை கழகம் மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள மறுத்து திடீரென தடைவிதித்தது. இந்நிலையில் கால நீட்டிப்பு செய்ய எங்களை மீண்டும் பல்கலை கழகத்திற்கு சுமார் 50,000 வரை தாமத கட்டணம் செலுத்த அறிவுறுத்துகிறார்கள். ஏற்கனவே நாங்கள் குடும்ப சூழ்நிலையால் ஆய்வேட்டை சமர்ப்பிக்க முடியாமல் இரண்டு முறை தாமத கட்டணம் செலுத்திய நிலையில் பல்கலை கழகத்தின் அலட்சியம் மற்றும் மறைமுக ஆசைகளால் மாணவர்களை பழிவாங்க துடிக்கிறது.

ஏற்கனவே நாங்கள் ஆய்வு செய்யும் போது பல்கலைக்கழகத்தின் ஆன்லைன் அட்ராசிட்டிகளுக்கு ஆளாகி அலைகழிக்கப்பட்டு அதிகபட்சமான ஆய்வு கட்டணக் கொள்ளையால் நசுக்கப்பட்டு வாழ்வாதரம் இழந்து ஆண்களாகிய நாங்களே இப்படி  பல இன்னல்களுக்கு ஆளாகிய நிலையில் பெண்களின் நிலையை நீங்களே கொஞ்சம் யோசித்து பாருங்கள் வீட்டிலும். வெளியிலும் சொல்ல முடியாமல் எப்படியாவது படிப்பை முடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவ்வளவு சங்கடங்களை வெளியில் சொன்னால் குடும்ப வாழ்க்கை கேள்விக்குறியாக மாறிவிடும் என்ற பயத்திலும் வாழ்ந்து வருகிறோம்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO