மத்திய சிறை வளாகத்திற்குள் பால்குடம் எடுத்து சென்ற மக்கள்

மத்திய சிறை வளாகத்திற்குள் பால்குடம் எடுத்து சென்ற மக்கள்

திருச்சி மத்திய சிறை காவலன் குடியிருப்பில் கோவில் கொண்டு எழுந்திருக்கும் ஸ்ரீ புற்று மகா முத்து மாரியம்மன் கோவிலில் (25.05.2024) அன்று மாலை அம்பாளுக்கு அபிஷேக ஆராதனையும் பூச்செரிதல் விழாவும் நடைபெற்றது.

மறுநாள் காலையில் பொன்மலை பட்டியில் உள்ள பொன்னேரி மாரியம்மன் கோவிலில் அம்மன் அலங்காரம் செய்த அம்மன் கரகம் மற்றும் பால்குடங்கள் சுமார் 100 பேர் பக்தர்கள் எடுத்தனர். அதனை தொடர்ந்து பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் சுமார் 10 அடி நீளம் கொண்ட அலகு குத்தி தங்களுடை நேர்த்தி கடனை செலுத்தினர். பின்னர் அவர்கள் கொண்டு வந்த பால்குடத்தை அம்பாளுக்கு அபிஷேகம் செய்தனர்.

பிறகு அம்பாளுக்கு மாவிளக்கு பூஜையும் மதியம் ஒரு மணி அளவில் திருக்கோவிலில் சுமார் 1000 பேருக்கு அன்னதானங்கள் வழங்கப்பட்டது. மாலை அம்பாள் வீதி உலா செல்வதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்றது. மாலை சந்தன காப்பு அலங்காரத்துடன் இரவு அம்பாள் புறப்பாடு மற்றும் தப்பு மேல தானத்துடன் வானவேடிக்கையுடனும் திருவீதி உலா அங்குள்ள சிறை காவலர்கள் குடியிருப்பு வீடுகள் வழியாக சென்று அம்பாள் அருளை அப்பகுதி குடியிருப்பு மக்கள் அம்மாள் அருளை பெற்றனர்.

இந்த விழாவிற்கு திருச்சி சரகம் சிறைத்துறை துணைத் தலைவர் கே.ஜெயபாரதி மற்றும் மத்திய சிறை கண்காணிப்பாளர் M.ஆண்டாள், மகளிர் சிறை கண்காணிப்பாளர் வி.ருக்மணி பிரியதர்ஷினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மேலும் விழா சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்த ஓய்வு பெற்ற சிறை பணியாளர் A.C கணேசன் மற்றும் சிறை பணியாளர்களும் விழா குழுவினரும் திருவிழாவை சிறப்பாக நடக்க ஏற்பாடு செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision