மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள் பதிவு செய்யலாம் - ஆட்சியர் தகவல்

மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள் பதிவு செய்யலாம் - ஆட்சியர் தகவல்

திருச்சிராப்பள்ளி மாவட்டம், மத்திய பேருந்து நிலையம் அருகில் வ.உ.சி. சாலையில் மனமகிழ் மன்றமானது திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரின் முழு கட்டுப்பாட்டின் கீழ் மீண்டும் துவங்கப்படவுள்ளது. டென்னிஸ் மைதானத்தின் முழு நிர்வாக பொறுப்புகள் மற்றும் பராமரிப்பு பணிகள் அனைத்தும் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலரின் மேற்பார்வை மூலம் மேற்க்கொள்ளப்பட்டு அரசின் விதிமுறைகள் முறையாக கடைப்பிடிக்கப்படும்.

டென்னிஸ் மைதானத்தில் பயிற்சி மேற்கொள்ள விரும்புபவர்கள் தங்களுடைய பெயர். கடவுச்சீட்டு அளவு புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் தனிநபராக வந்து திருச்சிராப்பள்ளி மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும். தனிநபராக வந்து பதிவு செய்யும் நபர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும். ஒரு தனிநபர் மற்ற நபர்களுகாக சமர்ப்பிக்கும் ஆவணங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

டென்னிஸ் பயிற்சி நேரம் காலை 6-7, 7-8, 8-9 மணி வரையும் மாலை 3.30-4.30, 4.30-5.30. 5.30-6.30 மணி வரையும் செயல்படும். உறுப்பினர்கள் ஒரு மணி நேரத்திற்கு 46 நபர்கள் கொண்ட குழுக்களாக மட்டுமே அனுமதிக்கப்படுவர். காலை 10-11, 11-12, 12-1 மணி மற்றும் மாலை 2-3 மணி வரை தனிநபர்களுக்கு Pay and Play என்ற திட்டத்தின்கீழ் ஒரு மணி நேரத்திற்கு பணம் செலுத்திவிட்டு பயிற்சி மேற்கொள்ளலாம்.

சந்தாதொகை ஒரு மைதானத்திற்கு பொதுமக்களுக்கு ரூ.400/-, கல்லூரி மாணவர்களுக்கு ரூ.300/-, பள்ளி மாணவர்களுக்கு ரூ.200/- வீதம் கட்டணம் வசூலிக்கப்படும். பயிற்சி முகாம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்படும்.

சந்தா கட்டண விபரம் : விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கு நாளொன்றுக்கு தலா ஒரு கோர்ட்டிற்கு ரூ.3000/- என நினமும் காலை 9:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை அனுமதிக்கப்படும். டென்னிஸ் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் நாட்களில் சந்தாதாரர்களுக்கு பயிற்சி மேற்கொள்ள அனுமதி இல்லை.

கல்லூரி மாணவர்களுக்கான மாத சந்தா ஒரு மணி நேரத்திற்கு தலா ஒருவருக்கு ரூ.1000/-ம் பள்ளி மாணவர்களுக்கான மாத சந்தா ஒரு மணி நேரத்திற்கு தலா ஒருவருக்கு ரூ.750/-ம் பொதுமக்களுக்கான மாத சந்தா ஒரு மணி நேரத்திற்கு தலா ஒருவருக்கு ரூ.1500/- எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளையாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி என்ற முகவரியிலும் 7401703494 / 0431-2420685 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மா.பிரதீப்குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision