ரூ.5 கோடியில் கொள்ளிடம் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையம் விரைவில் செயல்படும் அமைச்சர் கே.என் நேரு பேட்டி

ரூ.5 கோடியில் கொள்ளிடம் குடிநீரை சுத்திகரிக்கும் நிலையம் விரைவில் செயல்படும் அமைச்சர் கே.என் நேரு பேட்டி

திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலுக்கு காணிக்கையாக பெறப்பட்டு, கம்பரசம்பேட்டை கோசாலையில் உள்ள பசு மற்றும் கன்றுகளை, பழங்குடியின சுயஉதவிக்குழுவினருக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.அதில், மகளிர் குழுவினருக்கு பசுக்களை வழங்கிய பின், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பேட்டிளித்தார்.

திருச்சி மாவட்டம், பச்சை மலையில் வசிக்கும் பழங்குடியின மகளிர் சுய உதவி குழுவினரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக கோசாலையில் உள்ள 122 மாடுகள் 70 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

மக்களுக்கு வழங்கப்படும் காவிரி குடிநீர் கலங்கலாக வந்ததால் அதனை சுத்தப்படுத்தும் வகையில் ஏற்கனவே ஸ்ரீரங்கத்தில் ஒரு ஏர் ஹேட்டர் அமைக்கப்பட்டுள்ளது அதேபோல், ஐந்து கோடி ரூபாய் செலவில் மற்றொரு ஏர் ஹேட்டரும் அமைக்கப்பட்டு, பயன்பாட்டுக்கு செப்டம்பர் 20 ல் ஒப்படைக்கப்படுகிறது.

மழை மற்றும் போக்குவரத்து இடையூறு காரணமாக சாலை பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. இயற்கை சீற்றத்தால் தாமதம் ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO