மழையினால் சேறும் சகதியுமாக மாறிய சாலை - சேற்றில் நின்று கொண்டு பொது மக்கள் போராட்டம்
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் அம்பிகாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் திருச்சி மாநகராட்சி குப்பைக்கிடங்கில் இருந்து வெளியேறும் கழிவு நீர் தேங்கிக் கிடக்கிறது. இதனால் மாணவர்கள் இந்த மைதானத்தை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள அரியமங்கலம் முதல் திருவெறும்பூர் வரை 10 கிலோ மீட்டர் தூரத்திற்கு பாதாள சாக்கடை பணிகள் நடைபெற்று வருகிறது.
இதற்காக மாநகராட்சியின் சுமார் 6 வார்டுகளில் சாலைகள் முழுவதும் சேதப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக பெய்துவரும் மழையின் காரணமாக, சாலைகள் முழுவதும் குண்டும் குழியுமாக, சேறும் சகதியுமாவும் காட்சி அளிக்கிறது. இந்த சாலைகளை பொதுமக்கள் பயன்படுத்த முடியாததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மாநகராட்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் சாலையில் இருக்கும் சேற்றில் இறங்கி மாநகராட்சியை கண்டித்து கோஷமிட்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய....
https://t.me/trichyvisionn