மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காலி குடங்களுடன் போராட்டம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காலி குடங்களுடன் போராட்டம்

அந்த நல்லூர் ஒன்றியம், கொடியாலம் ஊராட்சியில் காவேரி குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் பொது குடிநீர் குழாய் அமைத்திட கோரியும் சப்பானி கோயில் தெரு மயானத்திற்கு அடிப்படை வசதிகள் மற்றும் சாலை வசதி அமைத்திட கேட்டும்

 மேலும் தெரு சாலைகளை செப்பனிடக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் திருச்சி கரூர் தேசிய நெடுஞ்சாலையில் நடத்திட தீர்மானிக்கப்பட்டது ஊராட்சி கிளைகளின் செயலாளர்கள் பாரதிதாசன், சீனிவாசன், பரிமணம் ஆகியோர் தலைமையில் மாநகர்

மாவட்ட செயலாளர் கோவி.வெற்றிச்செல்வம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.லெனின் ஒன்றிய செயலாளர் சீனிவாசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் அஜித் குமார், நடராஜன், முருகன், கருணாநிதி, செல்வமணி, ரவிச்சந்திரன் மற்றும் ஊர்பொதுமக்கள்

 திரண்டனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு போலீசார் வருகை தந்து தாசில்தார் தலைமையில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தமையால் மறியல் போராட்டம் ஆர்ப்பாட்டமாக நடத்தப்பட்டது

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision