எரிவாயு தகன மேடை முன்பு காத்திருப்பு போராட்டம்!
திருச்சி கோ.அபிஷேகபுர கோட்டத்துக்கு உட்பட்ட மாநகராட்சியின் எரிவாயு தகன மையம் நான்கு மாதங்களுக்கு மேலாக மக்கள் பயன்பாட்டிற்கு இல்லாமல் உள்ளது .இது குறித்து பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் எரிவாயு தகன மையம் முன்னதாக அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக சாலையை சீரமைக்கவும் எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டிற்க்கு கொண்டு வரப்படும் என உறுதி அளித்ததின் பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
சாலை மிகவும் மோசமாக உள்ளதாகவும் அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டது. கோவிட் தொற்று காலத்தில் ஓயாமரி எரிவாயு தகனமேடை மட்டுமே தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்த எரிவாயு தகன மேடை பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தால் பொதுமக்கள் இறந்தவர்களின் இறுதி சடங்குகள் செய்ய உதவியாக இருக்கும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்தது.