மாவட்ட ஆட்சியர் உத்தரவை காற்றில் பறக்கவிட்ட நீர்வளத்துறை அதிகாரிகள்
டர் மழை காரணமாக காவிரி நீர் பிடிப்பு 11 மாவட்டங்களில் கரையோரங்களில் வசிப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவித்தப்பட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், கடந்த இரு தினங்களுக்கு முன்பு, திருச்சி மாவட்டத்தில் காவிரி, கொள்ளிட கரையோர மக்களுக்கு வெள்ளை அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆயினும் இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுற்றுலாவாசிகள் பலரும் ஆபத்தை உணராமல் முக்கொம்பு கதவணை பகுதியில் குளித்து வருகின்றனர்.
திருச்சி முக்கொம்பு மேலணைக்கு விநாடிக்கு 41,000 கன அடி நீர்வரத்து வந்து உள்ளது. இதில் காவிரியில் 20,000 கன அடியும் கொள்ளிடத்தில் 20,00 கன அடி நீரும் அதேபோல அய்யன் வாய்க்காலில் 300 கன அடியும், புள்ளம்பாடி கால்வாயில் 350 கன அடியும், பெருவள வாய்க்காலில் 275 கன அடி நீரும் திறந்து விடப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய...
https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO