மோசடி செய்யும் போலி நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகளின் உரிமையாளர்களை கண்டறியும் சிறப்பு சோதனை.

மோசடி செய்யும் போலி நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகளின் உரிமையாளர்களை கண்டறியும் சிறப்பு சோதனை.

திருச்சி மாநகரில் அரசு, தனியார் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்யும் தனியார் நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சிகளில் சோதனை நடத்திட திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, காவல் துணை ஆணையர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்கள்.

அதன்படி பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார் மனுக்களின் அடிப்படையில், (24.10.2024)-ந் தேதி திருச்சி மாநகரில் உள்ள வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பும் தனியார் ஏஜென்சி மற்றும் நிறுவனங்களை சோதனை செய்து அதில் போலியான நிறுவனங்கள் மற்றும் ஏஜென்சி உள்ளனவா என்பதையும் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாகவும் மற்றும் அரசு வேலை வாங்கி தருவதாகவும் கூறி ஏமாற்றும் நபர்களை கண்டறியும் வகையில்

காவல் துணை ஆணையர்கள் தெற்கு மற்றும் வடக்கு அவர்களின் மேற்பார்வையில் 12 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் கண்டோன்மெண்ட், அமர்வு நீதிமன்றம், எடமலைப்பட்டிபுதூர், கேகேநகர், ஏர்போர்ட், ஸ்ரீரங்கம், கோட்டை, பாலக்கரை, தில்லைநகர், உறையூர் மற்றும் அரசு மருத்துவமனை ஆகிய காவல் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 24 இடங்களில் சிறப்பு சோதனை (Special Drive) நடைபெற்றது.

மேற்படி நடைபெற்ற சோதனையில் தனியார் ஏஜென்சிகள் மற்றும் நிறுவனங்கள் முறையாக பதிவு செய்யப்பட்டு அரசு அனுமதியுடன் செயல்பட்டு வருகின்றனவா? எனவும், வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்பியவர்களின் விபரம் முறையாக பராமரிக்கபடுகின்றனவா எனவும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த சோதனையில் 7 ஏஜென்சிகளை சேர்ந்த 7 முகவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அரசு வேலை வாங்கி தருவதாக கூறும் நபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாமென்றும், அவ்வாறு கூறும் நபர்களின் விபரங்களை காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமென்றும், அவ்வாறு தகவல் தெரிவிப்பவர்களின் விவரம் ரகசியம் காக்கப்படும் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

மேலும் பொதுமக்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு அனுப்புவதாக கூறும் முகவர்கள் தங்களது ஏஜென்சிகளை ஜனசிகளை முறையாக பதிவு செய்துள்ளார்களா என்றும், அவர்கள் அரசாங்கத்திடம் உரிய அங்கீகாரம் பெற்ற முகவர்களா என்பதை உறுதி செய்து கொண்டு அவர்களை அணுக வேண்டுமென்றும், போலியான முகவர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம் எனவும், மாநகர காவல்துறை சார்பாக காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.

திருச்சி மாநகரில் வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்பும் போலியான ஏஜென்சிகள் மற்றும் முகவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளபடும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision