குழந்தையின்மை, பஞ்சகர்மா பிரிவுகள் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்கம் - சித்த மருத்துவ அலுவலர் தகவல்

குழந்தையின்மை, பஞ்சகர்மா பிரிவுகள் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடக்கம் - சித்த மருத்துவ அலுவலர் தகவல்

திருச்சி அரசு மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவில் சுகப்பிரசவத்திற்கான மகப்பேறு சஞ்சீவி திட்டம் மற்றும் ஆட்டிசம் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கப்பட்டன. கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள் இந்த பிரிவில் மீண்டும் வரும் நவம்பர் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ளன. ஒருங்கிணைந்த ஆயுஷ் மருத்துவ சிறப்பு கூட்டு சிகிச்சை பிரிவு திருச்சி கி.ஆ.பெ விசுவநாதம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அரசு தலைமை சித்த மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை பிரிவுகள் மீண்டும் தொடங்கப்படவுள்ளன ன. 

திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9 மணி முதல் 10 மணி வரை யோகா, மூச்சுப்பயிற்சி, முத்திரை, தியானப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. செவ்வாய்க்கிழமை காலை 8 மணிமுதல் பகல் நண்பகல் 12 மணி மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை குழந்தையின்மை மற்றும் கர்ப்பிணிகளுக்கான சிறப்பு சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு புதன்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் நரம்பு குறித்த சிகிச்சை பிரிவுகள் செயல்படுகின்றன.

ஒவ்வொரு வியாழக்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் எலும்பு மூட்டு வலிகள் குறித்த நோய்களுக்கான சிகிச்சை பிரிவு செயல்படுகிறது. வெள்ளிக்கிழமை மாலை 3 மணி முதல் 5 மணி வரை ஆயுஷ் கிளப் (நாள்பட்ட நோய்களுக்கான) சிறப்பு சிகிச்சை பிரிவு செயல்படுகிறது.

புதன், வியாழன், வெள்ளிக்கிழமைகளில் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை ஆட்டிசம் மற்றும் வர்ம சிகிச்சை பிரிவு செயல்படும். வெள்ளிக்கிழமை காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மற்றும் மாலை 3 மணி முதல் 5 மணி வரை பஞ்சகர்மா சிகிச்சை பிரிவு செயல்படும். சித்த மருத்துவமனையில் உள்ள சிறப்பு சிகிச்சை பிரிவுகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய....
https://chat.whatsapp.com/EAKTE8CG371C7uSS3EIUus

டெலிகிராம் மூலமும் அறிய...
https://t.me/trichyvisionn,