திருச்சியில் போலி தங்க நகைகளை அடகு வைத்து மோசடி செய்த கும்பல் கைது - தேசிய வங்கிகளிலும் மோசடி பரபரப்பு தகவல்
திருச்சி பாலக்கரையில் உள்ள மணப்புரம் பைனான்சில் ஒருவர் தங்க நகைகளை கொண்டு வந்து அடகு வைத்து அடகு வைத்து பணமும் பெற்று சென்று உள்ளார். பின்பு 12க்கும் மேற்பட்ட தங்க வளையல் நகை செட்டுகளை கொண்டு வந்து அடகு வைக்க முயன்ற பொழுது மணப்புரத்தில் உள்ள ஊழியர் ஒருவர் சந்தேகம் அடைந்து தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு நகை அடகு வைத்த நபர்கள் தலைமறைவாகி விட்டனர். பின்பு பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலி தங்க நகையை அடகு வைத்தவர்களை தேடி வந்தனர். போலி தங்க நகையை 6 லட்சம் ரூபாய்க்கு வைத்து மோசடி செய்ததுள்ளனர். செப்பு கம்பியில் தங்கம் முலாம் பூசி ஆறு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கு பாலக்கரையில் உள்ள மணப்புரத்தில் அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர்.
அதில் தங்கத்தின் மதிப்பு மட்டும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ஆகும். மீதி 5 லட்சம் ரூபாய்க்கு தங்கம் இல்லை என்று மணப்புரம் பைனான்ஸ் நிறுவனத்தினர் பாலக்கரை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மொத்தம் திருச்சியில் 12 இடங்களில் இதே போல் இவர்கள் நகைகளை வைத்துள்ளனர். மணப்புரம், முத்தூட் தேசிய வங்கிகளிலும் இதே போல் நகைகளை வைத்து அதிகமான அளவு பணத்தை வாங்கி உள்ளனர்.
சென்னையில் ஒருவர் இதை தொழிலாக செய்து வருவதாகவும், அவரிடம் இருந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இந்த கும்பல் நகைகளை அடகு வைத்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. போலி தங்க நகைகளை அடமானம் வைத்த பாலக்கரையை சேர்ந்த சரவணன் (37), இபி ரோட்டை சேர்ந்த ராம்குமார் (33), பாலக்கரை மல்லிகைபுரத்தை சேர்ந்த டேவிட் ஆரோக்கியராஜ் (35) ஆகிய 3 பேரையும் கைது செய்து குற்றவியல் நீதிமன்றம் எண் 2ல் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
போலி தங்க நகைகளை அடகு வைத்து மூன்று பேர் பணம் பெற்றுள்ளதாக மணப்புரம் கோல்ட் பைனான்ஸில் நிறுவனம் மட்டும் புகார் அளித்துள்ளது. மற்ற முத்தூட் மற்றும் தேசிய வங்கிகளில் போலி நகைகள் வைத்து ஏமாற்றி பணம் பெற்றது குறித்து இதுவரை புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision