திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கம்?? பணிகள் ஆரம்பிக்க அனுமதி!!

திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை விரிவாக்கம்?? பணிகள் ஆரம்பிக்க அனுமதி!!

கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டிருந்த திருச்சி விமான நிலைய பணியை தொடங்குவதற்கு இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு திருச்சி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. 14 ஆண்டுகளுக்கு முன்பு விமான நிலையத்தை விரிவுபடுத்துவதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி தமிழக அரசின் மூலம் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் 90 சதவீத நிலங்கள் கையப்படுத்தப்பட்ட நிலையில் மேற்கொண்டு பணிகள் எதுவும் செய்யப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. வருடக்கணக்கில் அனுமதி கொடுக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது மாவட்ட நிர்வாகம் இந்திய விமான நிலைய ஆணையத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் விமான நிலையத்தை விரிவு படுத்துவதற்கான பணிகளை இந்திய விமான நிலைய ஆணையம் துரிதமாக தொடங்க வாய்ப்பாக அமையும்.

இதன்மூலம் திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் ஓடுதளமும் விரிவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து விமான நிலைய ஓடுதளம் விரிவாக்கப்படும் பட்சத்தில் உள்ளூர் பொருளாதாரம், ஏற்றுமதி முதற்கொண்டு பல்வேறு நன்மைகள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். தற்போது இருக்கும் ஓடுதளம் சிறியதாக இருப்பதால் பெரிய ரக விமானங்கள், கார்கோ விமானங்கள் போன்றவை இயக்கப்பட முடியாத சூழ்நிலை உள்ளது. ஓடுதளம் விரிவாக்கும்போது அனைத்து ரக விமானங்களும் இங்கு இயக்கப்படும்.

இதனால் ஏற்றுமதி அதிகரிக்கப்படும் வாய்ப்பு அதிகம், அதேபோல தமிழ்நாட்டில் சென்னை மட்டுமே பல வெளிநாட்டு விமானங்களை இயக்கி வரும் நிலையில் பெரும்பான்மையினோர் பெங்களூரை தேர்ந்தெடுக்கின்றனர், இது அப்படியே திருச்சிக்கு மாற்றப்படும். இதுமட்டும் இல்லாமல் உள்ளூரை பொறுத்தவரை பல்வேறு விமானங்கள் இயங்குவதன் மூலம் போக்குவரத்து, உணவகம் மற்றும் தங்குமிடம் ஆகிய வசதிகள் அதிகளவில் தேவைப்படுவதால், உள்ளூர் பொருளாதாரம் அதிகரிக்கும் வாய்ப்பும் உள்ளது.

இந்தியாவின் முக்கியமான சர்வதேச விமான நிலையங்களில் ஒன்றாக திருச்சி சர்வதேச விமான நிலையம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision