சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த 1000 ஆண்டுகளை கடந்த அதிசய கோவில்!!

சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த 1000 ஆண்டுகளை கடந்த அதிசய கோவில்!!

திருச்சியில் இருந்து நாமக்கல் செல்லும் வழியில் முசிறியை அடுத்து சீனிவாசநல்லூரில் அமைந்துள்ளது இந்த ஆயிரம் ஆண்டு கால அதிசயம். குரக்கத்துறை பெருமான் அடிகள் என்று கல்வெட்டில் குறிக்கப்பட்டிருக்கும் இந்த கோவிலின் மூலவர் பெயர் குரக்கதுறை நாதர் என்றாகி பின்பு குரங்கநாதர் கோவில் என்றாகியுள்ளது.

சிற்ப வேலையில் காஞ்சிபுரத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவிலை ஒத்திருக்கும் இந்த கோவில் முதலாம் ஆதித்த சோழன் காலத்தில் செங்கல் தளியாக இருந்தது, அதனை கற்றளியாக மாற்ற வேண்டும் என முதலாம் ஆதித்தசோழன் விரும்பினார். ஆனால் அவரால் அதனை செய்ய முடியவில்லை. அதன்பின் ஒன்பதாம் நூற்றாண்டில் ஆட்சிபுரிந்த முதலாம் ஆதித்த சோழனின் மகன் பராந்தக சோழன் அவர்கள் முதலாம் ஆதித்த சோழனின் ஆசையின்படி இந்த கோவிலை கற்றளியாக மாற்றினார்.

காஞ்சிபுரத்தில் இருக்கும் கைலாசநாதர் கோவில் போன்று இருக்க வேண்டும் என்று கோவிலில் சிற்ப வேலைப்பாடுகளை மேற்கொண்டிருப்பார்கள். கைலாசநாதர் கோவிலில் மணல் சிற்பங்களாக இருக்கும் சிற்பங்கள் இங்கு கற்சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கைலாசநாதர் கோவிலில் இருக்கும் தட்சிணாமூர்த்தி சிற்பம் போன்றே இங்கு வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இக்கோவிலின் நான்கு புறங்களிலும் உள்ள மகர தோரணம் மிக சிறப்பாக செதுக்கப்பட்டிருக்கும். அதேபோல சின்ன சின்ன யாளி சிற்பங்களில் இருந்து வீரர்கள் வெளியே வரும் சிற்பம் இங்கு சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இந்திய தொல்லியல் துறையினரால் பாத்துக்கப்பட்டு வரும் இந்த கோவில் வரலாற்று ஆர்வலர்களுக்கு பெரும் வரலாற்றை தெரிவிக்க கூடியது ஆகும்..

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision