சமூக வலை தளங்களில் பதிவிட்ட நபர் கைது

சமூக வலை தளங்களில் பதிவிட்ட நபர் கைது

திருச்சிராப்பள்ளி மாவட்டம். சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் ராஜசேகர் (32) என்பவர், இணைய மற்றும் சமூக வலைதள குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களை கண்காணித்த போது, கடந்த (02.07.2024)-ஆம் தேதி 12.00 மணிக்கு சமூகவலைதளமான Facebook பார்த்துக் கொண்டிருந்த போது https://www.facebook.com/profile.php?id=100094700216494 என்ற facebook id-யை கொண்ட நபர் அவரது page-ல் பல Post-களை பதிவிட்டுள்ளார்.

அவற்றை பார்த்த போது அதில் இரு வேறு மதத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் முத்தம் கொடுப்பது போன்ற போட்டோவை பதிவிட்டு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்த பெண்களை பற்றி தவறுதலாக டைப் செய்து (28.06.2024) ஆம் தேதி https://www.facebook.com/permalink.php?story fbid=pfbid02KYLZkyxw4458wczyJKEMeM3buUMba PjjSdwsCSFwZ8coLzGUGUawU5zGokeRPeiNI&id=100094700216494 URL பதிவிடப்பட்டிருந்தது.

இது போன்று குறிப்பட்ட மதத்தைச் சேர்ந்த பெண்களை அவமதிக்கும் வகையில் அவரது முகநூல் பக்கத்தில் தொடர்ந்து பதிவுகளை பதிவிட்டு வந்ததால் சைபர் கிரைம் காவலர் ராஜசேகர் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் காவல் குற்ற எண் 31/24, U/s 153 (A), 504, 505(1)(C), 505(2) IPC & 67, 67A IT Act r/w 4 of Indecent Representation of Women (Prohibition) Act 1986- ன் படி வழக்கு பதிவு செய்து காவல் கண்காணிப்பாளர் டாக்டர். வீ. வருண் குமார் உத்தரவின் படி தனிப்படை அமைக்கப்பட்டு எதிரியை தேடப்பட்டு வந்த நிலையில், மேற்படி பதிவினை பதிவிட்ட அசோக்குமார் (27), த.பெ. ரவிந்திரன், பெருமாள் கோவில் தெரு, அப்பன் திருப்பதி அஞ்சல், மதுரை மாவட்டம் என்பவரை இன்று (04.07.2024) கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.

இது போன்று பெண்களை அவமதிக்கும் வகையிலும், இரு வேறு மதத்தினரிடையே பிரச்சனை ஏற்படும் வகையிலும் வீடியோக்களை சமூக வலை தளங்களில் பதிவிட்டு வரும் நபர்களை கண்காணிக்க திருச்சி மாவட்ட காவலர்களால் இணைய மற்றும் சமூக வலைதள குழு இயங்கி வருகிறது என திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய... https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision