திருச்சிக்கு உயர்மட்ட பாலமும், மெட்ரோவும் வருது - அமைச்சர் நேரு பேட்டி

திருச்சிக்கு உயர்மட்ட பாலமும், மெட்ரோவும் வருது - அமைச்சர் நேரு பேட்டி

திருச்சி மாநகரில் சாலை ரோடு - மெயின் கார்டு கேட்டை இணைக்கும் வகையில் ரெயில்வே தண்டவாளத்தின் குறுக்கே மேம்பாலம் ஒன்று உள்ளது. 157 ஆண்டுகள் பழமையான அந்த பாலம் வலுவிழந்துள்ளதால் அங்கு புதிய பாலம் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது. 

அந்த மேம்பாலம் அகலப்படுத்தி கட்டுவதற்கு ரூ.34.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. அந்த பால கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடக்கி வைத்தார். அந்தப் பணிகள் அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குள் முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல காவேரி ஆறு அய்யாளம்மன் படித்துறை அருகே ரூ.13.70 கோடி மதிப்பீட்டில் பறவைகள் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அந்த பூங்கா அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவும் இன்று நடைபெற்றது. அமைச்சர் கே என் நேரு அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார். 

பின்னர் அந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே என் நேரு..... திருச்சியில் பொழுது போக்கு அம்சம் மிக குறைவாகவே உள்ளது. முக்கொம்பு பூங்கா சரியாக பராமரிக்கப்படவில்லை, அதனால் அந்த பூங்காவை சீர் செய்வதற்கான நிதி இந்தாண்டு ஒதுக்கப்படும். பறவைகள் பூங்காவிற்கு நாளொன்றுக்கு 5000 முதல் 10000 பேர் வருவார்கள். ரயில்வே மேம்பால பணிகள் விரைவில் முடிவடையும். திருச்சி மாவட்டத்தில் சாலை விரிவாக்கம், புதிய சாலைகள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றார். 

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு.... திருச்சியில் உயர் மட்ட பாலம் மற்றும் மெட்ரோ உள்ளிட்ட இரண்டு திட்டங்களுமே செயல்படுத்தப்படும். மெட்ரோ பணிகள் திருச்சியில் மேற்கொள்ளலாம் என மெட்ரோ நிர்வாகம் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளார்கள். மெட்ரோ மற்றும் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும்போது இரண்டுக்கும் இடையே இடையூறு இல்லாத வகையில் அமைக்கப்படும்.

பஞ்சப்பூரில் அமைய இருக்கும் புதிய ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், புதிய ஐடி காரிடார், உயர்மட்ட பாலங்கள் என அனைத்து வகையிலும் திருச்சி மாநகரம் மிக பெரிய அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இருக்கும் ஆளுநரின் நிலைபாடு குறித்த கேள்விக்கு ?.... சப்ஜக்ட் இன் கோர்ட் என்று சிரித்த முகத்துடன் கூறி சென்றார். இந்த நிகழ்ச்சிகளில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், சட்டமன்ற உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

 https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision