ஐந்தே மாதங்களில் ரூபாய் 48,76,50,000 அசத்தல் ஆதாயம் !!

ஐந்தே  மாதங்களில் ரூபாய் 48,76,50,000 அசத்தல் ஆதாயம் !!

தொடர் சரிவைக்கண்டு வந்த இந்திய பங்குச்சந்தை குறியீடுகள் நேர்மறையான குறிப்பில் வெள்ளியன்று முடிந்தது, பி.எஸ்.இ சென்செக்ஸ் 556 புள்ளிகள் அல்லது 0.86 சதவிகிதம் உயர்ந்து 65,387 ஆக முடிந்தது. ஒரு மல்டிபேக்கர் பென்னி பங்கு மட்டும் அன்றைய தினம் 1.05 சதவிகிதம் குறைந்து ஒரு பங்குக்கு ரூபாய் 56.49 ஆக முடிந்தது. இப்பங்கு ஒன்றின் 52 வார அதிகபட்ச மதிப்பு ரூபாய் 62 ஆகவும், 52 வாரக் குறைந்த விலை ரூபாய் 13.15 ஆகவும் இருந்தது. வெறும் ஐந்தே மாதங்களில் ரூபாய் 48,76,50,000 சம்பாதித்து கொடுத்துள்ளது எப்படி என்றுதானே கேட்கிறீர்கள் அதையும் பார்த்து விடுவோமே !.

இந்த சிவில் கட்டுமான நிறுவனத்தில் 1,30,00,000 அல்லது 1.3 கோடி பங்குகளை ஒரு பங்குக்கு சராசரியாக ரூபாய் 19.29 விலையில் வாங்கியுள்ளார் ஒருவர், மொத்த முதலீடு ரூபாய் 25,07,50,000 அல்லது தோராயமாக. ரூபாய் 25.07 கோடி. மார்ச் 2023ல் ஒரு பங்கின் சராசரி விலை ரூபாய் 14.95 என்ற விலையில் 1,00,00,000 பங்குகளை வாங்கியிருக்கிறார், மீண்டும் ஜூன் 2023ல் பங்கு ஒன்றுக்கு சராசரியாக ரூபாய் 33.75 விலையில் 30,00,000 பங்குகளையும் வாங்கினார். இந்த வாரம் வெள்ளிக்கிழமை முடிவடையும் வரை, பங்கு வர்த்தகம் BSEல் ஒரு பங்கிற்கு ரூபாய் 56.49, அவர் வைத்திருக்கும் பங்குகளின் மொத்த மதிப்பு ரூபாய் 73,84,00,000 அல்லது ரூபாய் 73.84 கோடி. எனவே, வெறும் 5 மாதங்களில் ரூபாய் 73,84,00,000 ரூபாய் 25,07,50,000 = ரூபாய் 48,76,50,000. காரணம் இந்நிறுவனத்திற்கு கிடைத்த ஆர்டர்கள்தான் ஆகஸ்ட் 22, 2023 அன்று, மத்தியப்பிரதேச ஜல் நிகாமில் இருந்து ரூபாய் 1,275.30 கோடிக்கான நகர்ப்புற உள்கட்டமைப்பு ஆர்டர், ஆகஸ்ட் 28, 2023 அன்று, நிறுவனம், JV பார்ட்னருடன் இணைந்து, டிபாங் பல்நோக்கு திட்டத்திற்கான விருதுக் கடிதத்தை NHPC லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ரூபாய் 3,637.12 கோடி மதிப்பில் பெற்றது.

நிறுவனத்தின் 3 ஆண்டு பங்கு விலை CAGR 67 சதவீதத்துடன் ரூபாய் 4,300 கோடிக்கு மேல் சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது. காலாண்டு முடிவுகளின்படி, நிகர விற்பனை 24.20 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 1,119 கோடியாகவும், நிகர லாபம் 16.22 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 43 கோடியாகவும் உள்ளது. ஆண்டு முடிவுகளின்படி, நிகர விற்பனை 24.32 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 4,202 கோடியாகவும், நிகர லாபம் 154.16 சதவிகிதம் அதிகரித்து 183 கோடி ரூபாயாகவும் உள்ளது. ஜூன் 30, 2023 நிலவரப்படி, நிறுவனத்தின் ஆர்டர் புத்தகத்தில் ரூபாய் 20,000 கோடி மதிப்புள்ள திட்டங்கள் உள்ளன.

சரி சரி என்ன பங்குய்யா யாருய்யா அந்த கோடிஸ்வரன் இதுதானே உங்கள் கேள்வி... நீங்க பெரிய கேடிங்க...என்ன கண்டு பிடிச்சுட்டிங்களா இத்தனை பரபரப்பையும் உருவாக்கிய மல்டிபேக்கர் பென்னி பங்கின் பெயர் PATEL ENGINEERING LTD. படேல் இன்ஜினியரிங் லிமிடெட் நீர், நீர்ப்பாசனம் மற்றும் நீர் வழங்கல், நகர்ப்புற உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து போன்ற பகுதிகளில் அணைகள், பாலங்கள், சுரங்கங்கள், சாலைகள், பைலிங் பணிகள், தொழில்துறை கட்டமைப்புகள் மற்றும் பிற வகையான கனரக சிவில் இன்ஜினியரிங் பணிகளில் ஈடுபட்டுள்ளது.அதெல்லாம் சரி யாருய்யா அந்த கோடீஸ்வரர் சொல்லிட்டா போச்சு பிரபல முதலீட்டாளர் விஜய் கேடியாதாங்க அவரு...!

(மறுப்பு : கட்டுரை தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே மற்றும் முதலீட்டு ஆலோசனை அல்ல நீங்கள் உங்கள் முதலீட்டு ஆலோசகரை கலந்து ஆலோசித்து முடிவுகளை எடுக்கவும்.)

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision