புதிய வசதிகளுடன் நோயாளிகளுக்கான ஸ்மார்ட் வாட்ச்
திருச்சி துவாக்குடியில் உள்ள என்.ஐ.டி கல்லூரியில் மருத்துவ அணிகலன் கருவிகள் (wearable Device) குறித்த 5 நாள் பயிலரங்கு நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய அம்சமாக இன்று திருச்சி என்.ஐ.டி கல்லூரி மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொலுயூசன்ஸ் நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இதன் மூலம் மருத்துவ அணிகலன் கருவிகள் தொடர்பான செயற்கை நுண்ணறிவு திறன் (AI) குறித்தும் எதிர்கால பயன்பாடுகள், தரவு சேமிப்பு, பிரச்சனைகளுக்கான தீர்வுகள், புதிய நுணுக்கங்கள் குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மாணவர்களின் புதிய கண்டுபிடிப்புகளை வெளிக்கொண்டு வரும் விதமாக இந்த புரிந்துணர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
என்ஐடி இயக்குனர் அகிலா மற்றும் டேட்டா நெட்டிக்ஸ் சொல்யூஷன் நிறுவனத்தின் முதன்மை செயல் அலுவலர் பாலா ஸ்ரீ ராகவன் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். மேலும் இது குறித்து என்.டி.ஐ இயக்குனர் அகிலா செய்தியாளர்களிடம் கூறுகையில்...... இங்கு பயிலக்கூடிய மாணவர்களுக்கு தொழில்துறையில் எந்தவிதமான மருத்துவ அணிகலன் கருவியின் உள்ளது. அதனை அடுத்த கட்டத்திற்கு எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்த விழிப்புணர்வு கிடைக்கும்.
மாணவர்களுக்கு தொழில் துறையுடன் இணைந்து அனுபவக் கல்வியினை கொடுக்க வேண்டும், மேலும் மாணவர்கள் படிக்கும் காலத்தில் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும்போது, தொழில் நிறுவனமானது அதற்குண்டான வாய்ப்பை வழங்கும் நிலையில், மாணவர்கள் கல்வியை பாதியிலேயே நிறுத்தாமல் அதற்கான காலங்கள் எடுத்துக்கொண்டு மீண்டும் கல்வியை தொடரலாம் என தேசிய கல்வி கொள்கை அறிவுறுத்தி உள்ளது.
அதன் அடிப்படையில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. என்.ஐ.டி மாணவர்களுக்காக இதுவரை தொழில் நிறுவனங்களுடன் 40 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளது என்றார். இதனைத் தொடர்ந்து டேட்டா நெட்டிக்ஸ் சொல்யூஷன் நிறுவனம் தங்களது ஸ்மார்ட் வாட்ச் மூலமாக, மருத்துவர் பரிந்துரைக்கப்பட்ட ஒருவரின் இதயத்துடிப்பின் அளவு, மருந்து உட்கொள்ளும் நேரம் ஆகியவற்றை நோயாளியின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் வயது முதிர்ந்தவர்கள் தவறி கீழே விழுந்தாலோ, அல்லது வீட்டில் இருந்து குறிப்பிட்ட எல்லைக்கு அப்பால் சென்றாலோ அதனை sos மூலம் பதியப்பட்ட குறிப்பிட்ட மொபைல் எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கும் விதமாக இந்த ஸ்மார்ட் வாட்ச் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை டேட்டா நெட் டிப்ஸ் சொல்யூஷன் நிறுவனத்தின் அலுவலர்கள் செயல்முறை விளக்கமாக செய்து காண்பித்தனர்.
இந்நிகழ்வில் பேராசிரியர்கள் சிவகுமாரன் ஸ்ரீ மூர்த்தி பிருந்தா உள்ளிட்ட பேராசிரியர்கள் மற்றும் டேட்டாநெட்டிக்ஸ் சொல்யூஷன் நிறுவனத்தின் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision