சென்னையை தொடர்ந்து பெங்களூருவில் அமைகிறது பாக்ஸ்கான் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னையை தொடர்ந்து பெங்களூருவில் அமைகிறது பாக்ஸ்கான் 40 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு

சீனாவின் குடைச்சல் காரணமாக தைவான் நாட்டைச்சேர்ந்த நிறுவனமான பாக்ஸ்கான், இந்தியாவில் ஐ போன் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளது. சென்னை அருகே ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தொழிற்சாலையில் ஐ போன் உற்பத்தி செய்யப்படும் நிலையில், தன் தொழிலை நாட்டின் பல பகுதிகளிலும் விரிவாக்கும் முயற்சியில் பாக்ஸ் கான் தீவிரமாகியுள்ளது.

இதன் ஒரு பகுதியாக கர்நாடகா மாநிலத்தில் உள்ள தொட்டபல்லாபூர் மற்றும் தேவனஹள்ள தாலுகாக்களில் தகவல் தொழில்நுட்ப முதலீட்டு மண்டபத் தில் 300 ஏக்கர் பரப்பளவில் ஐ போன் உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை பாக்ஸ்கான் அமைக்கவுள்ளதாக அறிவித்தது. இதற்காக முன்னதாக இருந்த பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசு 6 ஆயி ரம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டுத் திட்டங்களுக்கு அனுமதித்தது.

இப்பொழுது, இந்த முதலீட்டின் அளவு 13 ஆயிரத்து 911 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த முதலீட்டுத் திட்டங்களால் பாக்ஸ்கான் ஆலைகளில் 50 ஆயிரம் பேருக்கு மேல் வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, 34 ஆயிரத்து 115 கோடி ரூபாய் மதிப்பிலான 14 புதிய தொழில் முதலீட்டு திட்டங்களுக்கும் கர்நாடகா ஒப்புதல் வழங்கியுள்ளது.

10 திட்டங்களின் மதிப்பு 19 ஆயிரத்து 452 கோடி ரூபாயாகும். இந்தத் திட்டங்கள் வழியாக 13 ஆயிரத்து 500 புதிய வேலை வாய்ப்புகள் உரு வாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வட கர்நாடகாவுக்கு 9 ஆயிரம் கோடி ரூபாய் தொழில் முதலீடு கிடைக்கும் என்று அந்த மாநில அரசு அறி வித்துள்ளது. புதிய தொழில் முதலீட்டுத்திட்டங்கள் ஜேஎஸ்ட பிள்யூ ரீனீவ் எனர்ஜி, ஜானகி கார்ப்பரேஷன், ஜேஎஸ் டபிள்யூ ஸ்டீல், ஓரியண்ட் சிமெண்ட் லிமிடெட் ஆகியவை மட்டும் 4 ஆயிரம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மொத்தம் 4,000 வேலைகளை உருவாக்கும் என்று கூறப்படுகிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

 அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision