காலாண்டில் கடன் மற்றும் டெபாசிட் வளர்ச்சியில் தரவரிசையில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா முதலிடம்!!

காலாண்டில் கடன் மற்றும் டெபாசிட் வளர்ச்சியில் தரவரிசையில் பாங்க் ஆஃப் மகாராஷ்டிரா முதலிடம்!!

24ம் நிதியாண்டின் முதல் காலாண்டில், பொதுத்துறை கடன் வழங்குபவர்களில் ஒன்றான பொதுத்துறை வங்கிகளில் முதன்மைச் செயல்திறனுடைய வங்கியாகத் திகழ்கிறது பாங்க் ஆப் மகாராஷ்டிரா. புனேவை தலைமையிடமாகக் கொண்ட இவ்வங்கி வைப்புத்தொகை மற்றும் முன்பணங்கள் கிட்டத்தட்ட 25 சதவிகித உயர்வை பதிவு செய்துள்ளன. இது ஏப்ரல் - ஜூன் காலாண்டில் எந்தவொரு பொதுத்துறை வங்கியிலும் இல்லாத அதிகபட்சமாகும்.

பொதுத்துறை வங்கிகளின் (PSBs) வெளியிடப்பட்ட காலாண்டு எண்களின்படி, 24.98 சதவிகித வளர்ச்சி விகிதத்துடன், வங்கியின் மொத்த உள்நாட்டு முன்பணங்கள் ஜூன் 2023 இறுதியில் ரூபாய் 1,75,676 கோடியாக உயர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்து யூகோ வங்கி 20.70 சதவிகித வளர்ச்சியுடன், பாங்க் ஆப் பரோடா 16.80 சதவிகித வளர்ச்சியுடனும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி 16.21 சதவிகித வளர்ச்சியும் பெற்று முறையே மூன்றாவது மற்றும் நான்காவது இடங்களைப் பிடித்துள்ளன. நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, உள்நாட்டு முன்பண வளர்ச்சியில் 15.08 சதவிகிதம் உயர்ந்து ஐந்தாவது இடத்தில் உள்ளது.

எஸ்பிஐயின் மொத்தக் கடன்கள் சுமார் 16 மடங்கு உயர்ந்து ரூபாய் 28,20,433 கோடியாக இருந்தது. சில்லறை - விவசாயம் - MSME (RAM) கடன்களின் அடிப்படையில், BoM 25.44 சதவிகித வளர்ச்சியைப் பெற்றுள்ளது. அதைத் தொடர்ந்து பஞ்சாப் & சிந்து வங்கி 19.64 சதவிகிதத்தையும், பஞ்சாப் நேஷனல் வங்கி 19.41 சதவிகிதத்தையும் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் கொண்டுள்ளன. வைப்புத்தொகை வளர்ச்சியைப் பொறுத்தவரை, BoM 24.73 சதவிகித வளர்ச்சியைக் கண்டுள்ளது மற்றும் ஜூன் 2023ம் காலாண்டு இறுதியில் ரூபாய் 2,44,365 கோடியைத் திரட்டியுள்ளது. பேங்க் ஆப் பரோடா 15.50 சதவிகித டெபாசிட் வளர்ச்சியுடன் ( ரூபாய்10,50,306 கோடி) இரண்டாவது இடத்தில் உள்ளது.

அதே நேரத்தில் பஞ்சாப் நேஷனல் வங்கி 13.66 சதவிகிதம் அதிகரித்து ரூபாய் 12,67,002 கோடியாக உள்ளது என வெளியிடப்பட்ட தரவுகள் தெரிவிக்கின்றன. குறைந்த விலை நடப்புக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கு (CASA) டெபாசிட்களை 50.97 சதவிதத்துடன் பெறுவதில் BoM முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டது. அதைத் தொடர்ந்து சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 49.56 சதவிகிதமாக உள்ளது. கடன் மற்றும் வைப்புத்தொகைகளின் உயர் வளர்ச்சியால், வங்கியின் மொத்த வணிகமும் அதிகபட்சமாக 24.84 சதவிகித வளர்ச்சியைப் பதிவு செய்து

ரூபாய் 4,20,041 கோடியாகவும், பேங்க் ஆஃப் பரோடா 16.10 சதவிகித வளர்ச்சியைப் பதிவுசெய்து ஜூன் 2023 இறுதியில் ரூபாய் 18,62,932 கோடியாகவும் உள்ளது. ஆகவே மேற்கண்ட இரு வங்கிகளையும் உண்ணிப்பாக கண்கானிக்க சொல்கிறார்கள் சந்தை வல்லுநர்கள்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision