கெடேரி கன்றுகளுக்கு புருஸ்ஸிலா தடுப்பூசிப்பணி - மாவட்ட ஆட்சியர் தகவல்.

கெடேரி கன்றுகளுக்கு புருஸ்ஸிலா தடுப்பூசிப்பணி - மாவட்ட ஆட்சியர் தகவல்.

தேசிய வெக்கை நோய் கட்டுப்படுத்தும் திட்டத்தின் மூலம் (NADCP- Brucella Vaccination) திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஏற்கனவே இரண்டு சுற்றுகள் புருஸ்ஸிலா தடுப்பூசிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக தற்சமயம் (15.02.2024) முதல் (15.03.2024) முடிய 30 நாட்களுக்கு 3வது சுற்று புருஸ்ஸிலா தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படவுள்ளது.

இத்தடுப்பூசி 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரையுள்ள கிடேரி கன்றுகளுக்கு மேற்கொள்ளப்படவுள்ளது. இத்தடுப்பூசிப் பணியின் போது 4 மாதங்கள் முதல் 8 மாதங்கள் வரையுள்ள கிடேரி கன்றுகள் கண்டறியப்பட்டு, அவைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டு, காதுவில்லைகள் பொருத்தப்பட்டு, இத்தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்படும். தடுப்பூசிப் போடப்படும் கிராமங்களுக்கு அருகில் உள்ள கால்நடை நிலையங்கள் மூலமாக முன்னறிவிப்பு செய்யப்பட்டு இப்பணி மேற்கொள்ளப்படும்.

கிடேறி கன்று வைத்துள்ள விவசாய பெருமக்கள் மற்றும் கால்நடை வளர்ப்போர் இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்திக் கொண்டு தங்களது கன்றுகளுக்கு புருஸ்ஸிலா தடுப்பூசிப் போட்டுக் கொள்ள அருகிலுள்ள கால்நடை நிலையங்களை அணுகிடுமாறும், கன்றுகளுக்கு தடுப்பூசிப் போட்டுக் கொண்டு பயனடையுமாறும் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision