மாநகரத்தில் உள்ள சோதனை சாவடிகளில் காவல் ஆணையர் திடீர் ஆய்வு

மாநகரத்தில் உள்ள சோதனை சாவடிகளில் காவல் ஆணையர் திடீர் ஆய்வு

இன்று (28.10.2023)-ந் தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் ந.காமினி, திருச்சி மாநகரத்தில் உள்ள சோதனை சாவடிகளை (Check post) ஆய்வு செய்து சோதனை சாவடிகளில் உள்ள குறைபாடுகளை கேட்டறிந்தார்.

மேலும் விமான நிலைய காவல் நிலையத்தை (Airport Police Station) திடீர் ஆய்வு செய்தும், அங்கு வரவேற்பாளர்களின் (Receptionist) செயல்பாடுகள் குறித்து காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்கள்.

அதன்பின், காவல் நிலைய பதிவேடுகளை பார்வையிட்டு நிலுவையில் வழக்குகள் பற்றி ஆய்வு செய்தார்கள். மேலும் தேடப்படும் உள்ள குற்றவாளிகள் (Lookout Notice) விமான நிலைய அதிகாரிகளிடம் பெறப்பட்டு, அவர்களை முறையாக சம்மந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றார்களா? நிலைய பதிவேடு என பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.

மேலும் காவல் நிலையத்திற்கு வரும் பொதுமக்களிடம் வரவேற்பாளர்கள் மற்றும் காவல் ஆளிநர்கள் கனிவாக நடந்து கொள்கிறார்களா என நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள். மேலும் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எனவும், குற்றத்தடுப்பு தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும், கஞ்சா, குட்கா மற்றும் இதர போதை பொருள்கள் நடமாட்டத்தை தடுக்க வேண்டும் எனவும்,

தமிழக முதலமைச்சரின் முதல்வரின் முகவரி மனுக்கள், பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்படும் மனுக்களின் மீது தனிக்கவனம் செலுத்தி துரித நடவடிக்கை எடுக்கவும், ரோந்து காவலர்களின் எண்ணிக்கை அதிகப்படுத்தி, குற்றதடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்கினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision