திருச்சியை திருவிழாவாக மாறிய "ஹாப்பி சாலை"

திருச்சியை திருவிழாவாக மாறிய "ஹாப்பி சாலை"

தினமும் காலை எழுந்த உடனே வேலைக்கு தயாராகி, ஓடி ஓடி உழைத்துக் கொண்டே இருக்கும் மக்களுக்களின் மனமகிழ்ச்சி மற்றும் புத்துணர்விற்காக வயது வரம்பின்றியும், பாலின பேதமின்றியும் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் வகையில் சமீப காலமாக தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், உதகை,

பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் தமிழக காவல்துறை மாவட்ட நிர்வாகம் சார்பாக விழிப்புணர்வு மனமகிழ் நிகழ்ச்சி '(Happy Street)' என்ற நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதேபோல் திருச்சி மாநகரத்தில் வசிக்கும் பொதுமக்கள், விடுமுறை நாளான ஞாயிற்றுகிழமை இன்று (23.07.2023) பயனுள்ளதாகவும், மகிழ்ச்சியாகவும்

கொண்டாடும் வகையில் காலை 6 மணி முதல் 10 மணி வரை திருச்சி நீதிமன்றம் MGR சிலை அருகில் Student Road - ல் "மனமகிழ் நிகழ்ச்சி" "Happy Salai" Young Indians என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திருச்சி மாநகர காவல்துறை சார்பாக நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சியில், Drone Shows, குழந்தைகளுக்கான விளையாட்டு திருவிழா (Kids Carnival), Zumba, மூத்த குடிமக்கள் கார்னர் (Senior Citizen Corner), செல்லப்பிராணிகள் கண்காட்சி (Pot Shows), ஆட்டம் - பாட்டம் (Dance Jocky), உடல் பரிசோதனைகள் (Health Screening), உணவுகள் விற்பனையகம் (Food Stalls) மற்றும் காவல்துறை சார்பில்

ஆயுத கண்காட்சி, போலீஸ் இசை குழு (Police Band Music), காவல்துறை துப்பறியும் மோப்ப நாய்ப டை கண்காட்சி மற்றும் பயனுள்ள பொருள்கள் விற்பனையகம் (Stalls) என 30க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் திருச்சி மாநகரில் உள்ள பொதுமக்கள் தங்களது குடும்பத்துடன் வருகை புரிந்து மகிழ்ச்சியாக ஆடல், பாடல், விளையாட்டு என கொண்டாடினர்.

இந்நிகழ்ச்சியின் மூலம் திருச்சி மாநகர பொதுமக்களிடையே சாலை மற்றும் போக்குவரத்து விதிமுறைகள் பின்பற்றுவது குறித்தும், மது மற்றும் போதை பொருள் பழக்க வழக்கங்களிலிருந்து எவ்வாறு தற்காத்து கொள்வது போன்ற விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. 

இந்த Happy salai நிகழ்ச்சியில் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள், கல்லூரி மாணவ, மாணவிகள், ஆண்கள் என வயது வரம்பு இல்லாமல் அனைவரும் சமமாக ஒன்று கூடி மகிழ்ச்சியாக சத்தமிட்டு ஆடி ,பாடி கொண்டாடினர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision