வருமான வரி அதிகாரிகள் செந்தில் பாலாஜி வீட்டுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டுக்கும் வரலாம்

வருமான வரி அதிகாரிகள் செந்தில் பாலாஜி வீட்டுக்கு மட்டுமல்ல உங்கள் வீட்டுக்கும் வரலாம்

சமீப காலங்களில் பணப் பரிவர்த்தனைகளில் வருமான வரித்துறை மிகவும் கவனம் செலுத்தி வருகிறது ஆகவே நாம் எச்சரிக்கையாக இருப்பது மிகவும் அவசியம். கடந்த சில ஆண்டுகளில், வருமான வரித்துறை மற்றும் வங்கிகள், பரஸ்பர நிதி நிறுவனங்கள், தரகர் தளங்கள் போன்ற பல்வேறு முதலீட்டு தளங்கள் பொதுமக்களுக்கான பண பரிவர்த்தனை விதிகளை கடுமையாக்கியுள்ளன. அதைப் பற்றிய முழு விவரங்களையும் கொஞ்சம் தெரிஞ்சுக்கங்க...

இப்போது நீங்கள் செய்யும் முதலீடு மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை மட்டுமே பண பரிவர்த்தனைகளை அனுமதிக்கின்றன என்பது நம்மில் பலருக்கும் தெரிந்த விஷயம்தான் என்றாலும் சிறிய விதிமீறல் இருந்தாலும் வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பிவிடும். இதுபோன்ற பல பரிவர்த்தனைகள் உள்ளன, வருமான வரித்துறை மூலம் அவை தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. வங்கிகள், பரஸ்பர நிதிகள், தரகு நிறுவனங்கள் மற்றும் சொத்து பதிவாளர்களுடன் நீங்கள் பெரிய பண பரிவர்த்தனைகளை செய்தால், அவர்கள் வருமான வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும். இதுபோன்ற ஐந்து முக்கிய பரிவர்த்தனைகளைப்பார்ப்போம். 

1. வங்கி நிலையான வைப்பு FIXED DEPOSIT : வங்கி எஃப்டியில் ரொக்க வைப்புத்தொகை ரூPAAY 10 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நிலையான வைப்புகளில் தனிநபர் வைப்புத்தொகை நிர்ணயிக்கப்பட்ட வரம்பை மீறுகிறதா என்பதை வங்கிகள் தெரிவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.

2. வங்கி சேமிப்பு கணக்கு வைப்பு : வங்கிக் கணக்கில் பணம் வைப்பதற்கான வரம்பு ரூபாய் 10 லட்சம். சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர் ஒரு நிதியாண்டில் ரூபாய் 10 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால், வருமான வரித்துறை வருமான வரி நோட்டீஸ் அனுப்பலாம். இதற்கிடையில், ஒரு நிதியாண்டில் ரூபாய் 10 லட்சத்தைத் தாண்டிய வங்கிக் கணக்கில் ரொக்க வைப்பு மற்றும் திரும்பப் பெறுதல் ஆகியவை வருமான வரித்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட வேண்டும். அதேபோல நடப்புக் கணக்குகளில், வரம்பு ரூபாய் 50 லட்சம் என்றாலும் தெரிவிப்பார்கள்.

3. கிரெடிட் கார்டு பில் செலுத்துதல் : CBDT விதிகளின்படி, கிரெடிட் கார்டு பில்களுக்குப் பதிலாக ரொக்கமாக ரூபாய் ஒரு லட்சம் அல்லது அதற்கு மேல் பணம் செலுத்தினால் வருமான வரித்துறையிடம் தெரிவிக்கப்பட வேண்டும். கூடுதலாக, கிரெடிட் கார்டு பில்களை செட்டில் செய்வதற்காக ஒரு நிதியாண்டில் ரூபாய் 10 லட்சம் அல்லது அதற்கு மேல் செலுத்தப்பட்டால், அந்த தொகையை வரித்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

4. ரியல் எஸ்டேட் விற்பனை அல்லது வாங்குதல் : சொத்து பதிவாளர், ரூபாய் 30 லட்சம் அல்லது அதற்கு மேற்பட்ட தொகைக்கு அசையாச்சொத்தின் முதலீடு அல்லது விற்பனையை வரி அதிகாரிகளிடம் கட்டாயம் தெரிவிக்க வேண்டும். எனவே, ஏதேனும் ரியல் எஸ்டேட் சொத்தை வாங்கும்போது அல்லது விற்கும்போது, ​​வரி செலுத்துவோர் தங்கள் பணப்பரிவர்த்தனைகளை படிவம் 26ASன் மூலம் தெரிவிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனெனில் சொத்துப் பதிவாளர் அதைப்பற்றி நிச்சயமாக வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தெரிவிப்பார் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

5. மியூச்சுவல் ஃபண்டுகள், பங்குகள், பத்திரங்கள் அல்லது கடனீட்டுப்பத்திரங்களில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள், ஒரு நிதியாண்டில் இந்த முதலீடுகளில் தங்களின் ரொக்கப் பரிவர்த்தனைகள் ரூபாய் 10 லட்சத்துக்கு அதிகமாகாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். இவை ஐந்து விஷயங்களில் நீங்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறீர்கள் நாம் செய்யும் இவை எப்படி வருமான வரித்துறைக்கு தெரியும் என்ற அலட்சியம் வேண்டாம், அந்தந்த துறை அதிகாரிகள் மேற்கண்ட வரம்பை தாண்டினால் வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது ஆகவே பீ கேர் புல் !.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision