வீட்டில் பாதாள சாக்கடை இணைக்க பணமா? - அதிகாரிகள் விளக்கம்

வீட்டில் பாதாள சாக்கடை இணைக்க பணமா? - அதிகாரிகள் விளக்கம்

திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் அனைத்தும் தனியார் நிறுவன் ஒப்பந்தகாரர்கள் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட குறிப்பிட்ட வார்டுகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துவது குறித்து ஒப்பந்தக்காரர்கள் வீட்டின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

அதில் திருச்சிராப்பள்ளி மாநகராட்சின் பாதாள சாக்கடை திட்டம் - பகுதி - 2, தொகுப்பு-1க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டத்தின் வீட்டு இணைப்பு தொடர்பாக வார்டு எண் 16, 35, 36, 37, 38, 39, 40, 42, 43, 44 மற்றும் 45 உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப்பணியின் கழிவுநீர் இணைப்பு உள்ள வீடுகளுக்கு சுற்றுசுவர்க்கு உள்பகுதியில் கழிவுநீர் ஆய்வு தொட்டி ஒன்று அல்லது இரண்டு மற்றும் சுமார் 6 மீட்டர் நீளமுள்ள UPVC குழாய் பதிக்கப்படும் என இதன் மூலம் தெரியபடுத்துகிறோம்.

 மேலும் 6 மீட்டர் நீளத்திற்கு கூடுதலாக கழிவு நீர் குழாய் இருப்பின் அதற்கு உண்டான செலவுகள் அனைத்தும் அதன் உரிமையாளர்களையே சாரும். இந்த திட்டத்திற்கு சுற்றுசுவர்களுக்குள் கழிவுநீர் இணைப்பதற்கு கழிவுநீர் ஆய்வு தொட்டி மற்றும் 6 மீட்டர் நீளத்திற்கு UPVC குழாய் பதிப்பதற்கு மட்டும் தான் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் உள்ளது என்பதை தெரியபடுத்துகிறோம் என்று மெர்சஸ் சுப்பையா கண்ஸ்ட்ரக்ஷன்ஸ் கம்பெனி லிமிடெட், சென்னை - 600083.

மேற்படி, மேலே குறிப்பிட்டதுபோல் ஒப்பந்தாரற்குரிய பணிகளுக்கு நாங்கள் எவ்வித பணமோ, பொருட்களோ கொடுக்கமாட்டோம் என்று உறுதியளிக்கிறோம். இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision