பெங்களூர் மருத்துவமனைக்கு செல்கிறார் அமைச்சர் மகேஸ்
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஸ் சேலத்தில் அரசின் நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு சென்னைக்கு கார் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்பொழுது தர்மபுரி அருகே காரில் சென்று கொண்டிருக்கும் பொழுதே அமைச்சர் தனக்கு உடல் சோர்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
உடனடியாக தர்மபுரி மருத்துவமனையில் மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்தனர். அமைச்சர் மகேஸ் உடன் இருப்பவர்கள் அவருக்கு சிறிய சோர்வு அதனால் மருத்துவர்கள் பரிசோதனை செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இதனை அடுத்து மருத்துவமனையில் அமைச்சர் முதலுதவி சிகிச்சை எடுத்துக் கொண்டார். பின்னர் மருத்துவமனையில் இருந்து கார் மூலம் பெங்களூரில் உள்ள நாராயண ஹிருதாலயா மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு அவருக்கு உயர்தர சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision