அதிரடியாக விலை உயர்கிறது ஹோண்டா கார்களின் விலை!
இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா, வரும் செப்டம்பர் மாதத்தில் இருந்து தான் சந்தைப்படுத்தும் குறிப்பிட்ட ரககார்கள் மீதான விலையை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் சந்தைப்பிரிவு துணைத்தலைவர் குணால் பெஹல் கூறும்போது "ஹோண்டா நிறுவனம் சந்தைப்படுத்திக் கொண்டிருக்கும் சிட்டி மற்றும் அமேஸ் மாடல்கள் கார்கள் மீதான விலை செப்டம்பர் மாதத்தில் இருந்து உயர்த்தப்படும் எனத்தெரிவித்திருக்கிறார்,.
கார்கள் தயாரிப்பில் உள்ளீட்டுப் பொருட்கள் மீதான விலை உயர்வு, தயாரிப்பு செலவீனங்கள் உயர்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கார்களின் விலை உயர்த்தப்படுகிறது. விலை உயர்வு எத்தனை சதவிகிதம் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்றார்.
ஹோண்டா சந்தைப்படுத்தும் அமேஸ் கார் அடிப்படை மாடலில் 7 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும், சிட்டி கார் 11 லட்சத்து 57 ஆயிரம் ரூபாய்க்கும், இ எச் இ வி ஹைபிரீட் கார்கள் 18 லட்சத்து 89ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision