திருச்சி VDart நிறுவனத்திற்கு தலைசிறந்த பணியிடங்களுக்கான (Great Place to Work) தர சான்றிதழ்

திருச்சி VDart நிறுவனத்திற்கு தலைசிறந்த பணியிடங்களுக்கான (Great Place to Work) தர சான்றிதழ்

திருச்சியின் VDart நிறுவனம் உலக அளவில்  புகழ்மிக்க தலைசிறந்த பணியிடங்களுக்கான(Great Place to Work) தர சான்றிதழை பெற்றுள்ளது.

திருச்சியில் 2007 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட நிறுவனம் தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும் நிறுவனமாகவும் உலக அளவில் தொழில் நுட்ப புதுமைகளை உருவாக்கும் மற்றும் அதை சார்ந்த சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் VDart நிறுவனம் செயல்பட்டு வருகிறது.

திருச்சியில் பிறந்து படித்து முடித்துவிட்டு சென்னை  அல்லது மற்ற மாநிலங்களுக்கு தான்   வேலைக்கு செல்லவேண்டிய சூழலை 2007ஆம் ஆண்டிலிருந்து  VDart நிறுவனம்  சிறிது சிறிதாக மாற்றத்தொடங்கியது.

VDart நிறுவனமானது தற்போது உலக அளவில் புகழ் பெற்ற தலைசிறந்த  பணியிடத்திற்கான சான்றிதழ் பெறும் அளவிற்கு உயர்ந்துள்ளது .

இந்த நிறுவனத்தின் தலைவரும் நிறுவனருமான சித் அகமத்  நிறுவனத்தை தொடங்குவதற்கான காரணமாக குறிப்பிட்டிருப்பது.
தன்னுடைய குழந்தைப் பருவத்தில் தந்தைக்கு  சொந்த ஊரிலேயே வேலை வாய்ப்பு இல்லாத போது வெளியூர் செல்லவேண்டிய சூழல்தான்.
அந்த சூழல் ஏற்படுத்திய தாக்கத்தின் உந்துதலால் திருச்சியில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்த வேண்டும், நாமே அதனை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கில் VDart நிறுவனத்தை தொடங்கினேன் என்கிறார்.

 2007ஆம் ஆண்டில் 5 பேர் கொண்ட குழுவாக தொடங்கப் பெற்ற நிறுவனமானது தற்போது திருச்சியில் மட்டும் 450 ஊழியர்களுக்கு மேல் பணிபுரியும் நிறுவனமாக மாறி உள்ளது.  

தலைசிறந்த பணியிடத்திற்கான சான்றிதழை திருச்சி VDart நிறுவனம் பெற்றிருப்பது குறித்து  நிறுவனத்தின் நிறுவனர் சித் அகமத்  ஊழியர்களோடு   தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார்.
எங்கள் ஊழியர்களின் நம்பிக்கையும், திறம்பட செயலாற்றும் விதமும் மற்றும் அனைவரும் வெற்றி பெற வேண்டும், உயர்செல்வம்  மற்றும் வாழ்க்கை தரத்தை முன்னேற்ற வேண்டும் என்று ஒருமித்த கலாச்சாராத்தை  கோட்ப்பாடாகக் கொண்ட நிறுவனமாக
 செயல்படுவதே இதற்குக் காரணம்.

 இந்த மகத்தான அங்கீகாரத்தை எங்கள் குடும்பமான ஊழியர்களுக்கு அர்ப்பணிக்கின்றேன்.

VDart நிறுவனமானது கொரானா காலகட்டத்திலும் ஆட்குறைப்பு, ஊதியக்குறைப்பு, மற்றும் ஊதிய தாமதம்  ஆகிய எந்த ஒரு இன்னல்களையும் தங்களுடைய ஊழியர்களுக்கு ஏற்படுத்தாத வண்ணம்  சிறந்த ஆளுமை பண்பு கொண்ட தலைவர்களை கொண்டு இயங்கும் நிறுவனமாக திருச்சியில் செயல்பட்டு வருகிறது .

அதுமட்டுமின்றி அனைத்து ஊழியர்களுக்கும் எப்பொழுதும்போல் சம்பள உயர்வு, ஊதிய உயர்வு, போனஸ் மற்றும் அனைத்து விதமான தொழிலாளர்கள் சலுகைகளையும் மற்றும் நன்மைகளையும் தொடர்ந்து இந்த நெருக்கடி கால கட்டத்திலும் செயல்படுத்திவருகிறது.

 மேலும்  300க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பினை கடந்த மார்ச் மாதம் 2020 இல் இருந்து மே மாதம் 2021 வரை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Cmwvowix0UuFpUMHHUljve