திருச்சி உத்தமர் கோயில் தேரோட்ட விழா

திருச்சி உத்தமர் கோயில் தேரோட்ட விழா

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் அமைந்துள்ள அருள்மிகு உத்தமர் கோயில் சித்திரை தேரோட்ட விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.


  உத்தமர் கோயில் மும்மூர்த்தி மற்றும் குரு பகவான் பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோயில் 108 திவ்ய தேசங்களில் மூன்றாவது திவ்ய தேச ஸ்தலமாகவும் திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளில் ஒன்றாக இக் கோயில்  விளங்குகிறது.

 இக்கோயிலில் சித்திரை தேரோட்ட விழா கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி வரும் மே 6 ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது ஏப்ரல்  27 ஆம் தேதி முதல் மே 3ஆம் தேதி வரை தினசரி காலை 8.30 மணிக்கு அலங்கார பல்லாக்கில் பெருமாள் புறப்பாடும், இதனை தொடர்ந்து மாலை 7.30 மணிக்கு பல்வேறு வாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடைபெற்றது.

   விழாவின் முக்கிய நிகழ்வான இன்று காலை 10:10 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் என்னும் தேரோட்ட விழா நடைபெற்றது.  தேரோட்ட விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.