ஓய்வு பெற்ற வட்டார வளர்ச்சி அதிகாரியின் வீட்டில் 90 பவுன் நகை 70 ஆயிரம் ரூபாய் கொள்ளை
இதனை தொடர்ந்து நேற்று இரவு கனிமொழியின் வீட்டின் முன் பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருக்க கண்ட எதிர் வீட்டில் உள்ளவர்கள் உடனடியாக சீர்காழியில் உள்ள கனிமொழிக்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த கனிமொழி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது படுக்கையறையில் பொருட்கள் சிதறி கிடந்தன. அங்கு இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்து 89 பவுன் தங்க நகை மற்றும் 70 ஆயிரம் ஆகியவை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள் அந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த வடக்கு துணை ஆணையர் அன்பு, உறையூர் காவல் உதவி ஆணையர் ராஜ் மற்றும் காவல் ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரித்தனர்.
போலீஸ் மோப்பநாய் பொன்னி வரவழைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்ட இடத்தில் மோப்பம் பிடித்து பின்னர் இரண்டு முறை வீட்டை சுற்றி வந்து சுமார் 400 மீட்டர் தூரம் ஓடி சென்றது. மேலும் கொள்ளை போன வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவை அடித்து நொறுக்கியும் ஹார்ட் டிஸ்கையும் எடுத்துச் சென்றுள்ளனர். இந்த திருட்டு சம்பவம் குறித்து உறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய... https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.co/nepIqeLanO