99 சதவீத மனுக்களுக்கு தீர்வு - மாநகர காவல் ஆணையர் தகவல்

99 சதவீத மனுக்களுக்கு தீர்வு - மாநகர காவல் ஆணையர் தகவல்

மக்களுடன் முதல்வர் முகாம், காவல்துறை இயக்குநர், மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோர்களிடம் கொடுத்த புகார் மனுக்களின் மீது தீர்வு கண்டறியும் வகையில் Petition Mela சிறப்பு முகாம் நடைபெற்ற பத்திரிக்கை செய்தி தமிழக முதல்வர் மற்றும் காவல்துறை இயக்குநர் பொதுமக்களின் குறைகளை தீர்க்கும் வகையில் வாரம்தோறும் புதன்கிழமைகளில் Petition Mela நடத்திட உத்தரவிட்டதன்பேரில், திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் ந.காமினி, பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில்

தமிழக முதல்வர் அறிவித்த "மக்களுடன் முதல்வர்", முகாமில் கொடுத்த மனுக்கள், இணையவழியில் கொடுத்த மனுக்கள், மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்த மனுக்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெற்ற மனுக்களின் மீது தீர்வு கண்டறியும் வகையில் நேற்று (10.01.2024)-ந் தேதி திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை திருமண மண்டபத்தில் Petition Mela சிறப்பு முகாம் காவல் ஆணையரின் மேற்பார்வையில் நடைபெற்றது. காவல் ஆணையர் மேற்பார்வையில் நடைபெற்ற Petition Mela-ல் கலந்து கொண்ட பொதுமக்கள் நேரில் வந்து கொடுத்த 24 மனுக்களில், மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர்களை நேரில் அழைத்து விசாரணை செய்து, உடனடியாக தீர்வு காணப்பட்டது.

மேலும் ஜனவரி 2024 மாதம் தமிழக முதல்வரால் தொடங்கப்பட்ட "மக்களுடன் முதல்வர்” முகாம் மூலம் 8 மனுக்கள் பெறப்பட்டு, மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காணப்படும். மேலும், இந்த ஆண்டு திருச்சி மாநகர பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு இணையவழியில் 55 மனுக்கள் பெறப்பட்டும், திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் நேரில் அளித்த 53 மனுக்கள் மீதும் மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரிகளிடம் நேரில் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், கடந்த 2023 ஆண்டு திருச்சி மாநகர பகுதியை சேர்ந்த பொது மக்கள் தங்களது குறைகளை தீர்த்துக்கொள்ளும் வகையில் முதலமைச்சர் தனிப்பிரிவில் இணையவழியில் கொடுக்கப்பட்ட 1890 மனுக்களில், 1875 (99%) மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டும், திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் அளித்த 2259 மனுக்களில் 83% மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மீதம் உள்ள மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.

இம்முகாமில், காவல் துணை ஆணையர்கள், காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள், மற்றும் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள். இதே போன்று திருச்சி மாநகர காவல்துறை சார்பாக தமிழக முதலமைச்சரின் அலுவலகத்தில் பெறப்பட்ட "மக்களுடன் முதல்வர்" மனுக்கள், மாவட்ட ஆட்சியர் அவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக பெறப்பட்ட புகார் மனுக்கள் மீது துரிதமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய...

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய....

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision