சூரியனை ஆய்வு செய்து தற்காத்து கொள்ள ஆதித்யா உதவும் - திருச்சியில் திட்ட இயக்குநர் பேட்டி

சூரியனை ஆய்வு செய்து தற்காத்து  கொள்ள ஆதித்யா உதவும் - திருச்சியில் திட்ட இயக்குநர் பேட்டி

தொழில் நுட்ப பெண்மணி சிறப்பு விருது மற்றும் இணைய தொழில் முனை திறன் பயிற்சி துவக்க விழா திருச்சியில் எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் நடந்தது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தியாவின் முதல் சூரிய மின் சக்தி திட்டமான ஆதித்யா L1 திட்ட இயக்குநர் நிஹார் ஷாஜி கலந்து கொண்டார்.

30 பசுமை சார்ந்த, பருவநிலை மாற்றம் சார்ந்த பெண்களின் சிறு குறு தொழில்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கினார். இந்த 30 தொழில் முனைவோரும் 3 மேலாண்மை மற்றும் தொழில்முனைவு துறை சார் நிபுணத்துவம் உடைய நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

இந்த நிகழ்வில் TREC-STEP திறன் பயிற்சி மையத்தின் நிர்வாக இயக்குனர் ஆர் எம் பி ஜவகர், தமிழ்நாடு பவுண்டேஷன் தலைவர் ராஜ ரத்தினம், உதவி பொது மேலாளர் பிந்து பாலகிருஷ்ணன் மற்றும் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். 

இந்நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஆதித்யா L1 திட்ட இயக்குனர் நிஹார் ஷாஜி கூறுகையில்... விண்வெளியில் மனிதனை அனுப்புவதற்கான சோதனை ஒரு பகுதி தான் ககன்யான் திட்டம் ராக்கெட்டில் செல்லும்போது விண்வெளியில் எதேனும் பிரச்சனை ஏற்பட்டால் எவ்வாறு தப்பித்து மீண்டும் பாதுகாப்பான முறையில் பூமி வந்தடைவது என்பது தான் இன்று சோதனை நடைபெற்றது.

இன்னும் பல கட்ட சோதனைகள் நடைபெறும் மேலும் இரண்டு மனித மாதிரிகள் அனுப்பி வெற்றி கண்ட பின்பு விண்வெளிக்கு மனிதர்களை அனுப்ப முடியும். அடுத்த கட்டமாக சந்திரனில் உள்ள மாதிரிகளை எடுத்து வந்து ஆராய்ச்சி மையத்தில் சோதனை செய்வது தொடர்பான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா சூரியன் எவ்வாறு இயங்குகிறது.சூரியனில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறுகிறது குறிப்பாக 11 வருடங்களுக்கு ஒரு முறை சூரியன் ஆக்ரோஷம் அடைந்து வரும் இதனால் விண்வெளியில் உள்ள செயற்கை கோள்கள் பாதிக்கப்படும் எனவே சூரியனை ஆய்வு செய்து அதனை தற்காத்து கொள்ள ஆதித்யா உதவும் என்றார்.

ஜனவரி முதல் வாரம் ஆதித்யா வெற்றி குறித்து தெரியும் ..மேலும் வெள்ளி, செவ்வாய் கோள்களை ஆய்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெறும் என தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய.... https://chat.whatsapp.com/DkbBJvl0HIfFrIqTcgIjdS

#டெலிகிராம் மூலமும் அறிய.... https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision